ADDED : மே 22, 2025 12:16 AM
உடுமலை, ;உடுமலை திருமூர்த்திமலை, பஞ்சலிங்க அருவிக்கு செல்லும் வழித்தடத்திலிருந்து, ஜல்லிமுத்தாம்பாறை அடர்ந்த வனப்பகுதியில், ஒருவர் துாக்கில் சடலமாக தொங்குவதாக, தளி போலீசாருக்கு வனத்துறையினர் தகவல் கொடுத்தனர்.
போலீசார் சடலத்தை மீட்டு, உடுமலை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
போலீசார் விசாரணையில், இறந்தவர் பொள்ளாச்சி, நல்லாம்பட்டியை சேர்ந்த சுப்ரமணியம், 50, என தெரிய வந்தது. கடந்த, 18ம் தேதி, மனைவியுடன் சண்டையிட்டு விட்டு, திருமூர்த்திமலை வந்து, வனப்பகுதிக்குள் சென்று துாக்கு மாட்டி தற்கொலை செய்துள்ளது, தெரியவந்தது.