ADDED : செப் 11, 2025 09:24 PM
உடுமலை; உடுமலை ஜி.வி.ஜி., விசாலாட்சி பெண்கள் கல்லுாரியில் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது.
கல்லுாரி செயலாளர் சுமதி முன்னிலை வகித்தார். கல்லுாரி முதல்வர் கற்பகவள்ளி, 'ஆசிரியர்கள் மாணவர்களின் வழிகாட்டி' என்ற தலைப்பில் பேசினார். கல்லுாரி இயக்குனர் மஞ்சுளா வாழ்த்து தெரிவித்தார்.
தொடர்ந்து மாணவியர் ஓணம் பண்டிகை கொண்டாடினர். மாணவியர் கேரள பாரம்பரிய உடை அணிந்து கல்லுாரியில் அத்தப்பூக்கோலம் போட்டு, கொண்டாடினர். நிகழ்வில் கல்லுாரி பேராசிரியர்களும் பங்கேற்றனர்.