/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ பிற மாநிலங்களுக்கு பறக்கும் பூசணி! உள்ளூரில் விலை சரிவு பிற மாநிலங்களுக்கு பறக்கும் பூசணி! உள்ளூரில் விலை சரிவு
பிற மாநிலங்களுக்கு பறக்கும் பூசணி! உள்ளூரில் விலை சரிவு
பிற மாநிலங்களுக்கு பறக்கும் பூசணி! உள்ளூரில் விலை சரிவு
பிற மாநிலங்களுக்கு பறக்கும் பூசணி! உள்ளூரில் விலை சரிவு
ADDED : செப் 11, 2025 09:24 PM

உடுமலை; உடுமலை தாந்தோணி, மலையாண்டிபட்டணம், மலையாண்டிகவுண்டனுார், குட்டியகவுண்டனுார், எலையமுத்துார் உட்பட பகுதிகளில், பரவலாக பூசணி சாகுபடி கிணற்று பாசனத்துக்கு மேற்கொள்ளப்படுகிறது.
முன்பு, பொங்கல் சீசனுக்கு மட்டும், இச்சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வந்தது. கிணறு மற்றும் போர்வெல்களில், தண்ணீர் பற்றாக்குறை காரணமாக, சொட்டு நீர் பாசனம் அமைத்து, குறைந்த தண்ணீர் தேவையுள்ள, பூசணி சாகுபடியை, அனைத்து சீசன்களிலும் மேற்கொள்ள துவங்கினர்.
பிற மாவட்ட தேவை குறைவாக இருப்பதால், பூசணிக்கு போதிய விலை கிடைக்காத நிலை இருந்தது. ஆனால், ஒடிசா உள்ளிட்ட பிற மாநிலங்களில் பூசணிக்கு தேவை இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, அறுவடை செய்த பூசணியை விற்பனைக்காக, அம்மாநிலத்துக்கு அனுப்பி வருகின்றனர்.
விவசாயிகள் கூறியதாவது: ஓணம் பண்டிகை சீசனையொட்டி, பூசணிக்கு கடந்த வாரம் வரை கிலோவுக்கு 24 ரூபாய் விலை கிடைத்தது. பண்டிகை முடிந்ததும் விலை கிலோ, 12 ரூபாயாக சரிந்து விட்டது.
இந்நிலையில், ஒடிசாவில் தேவை இருப்பதால், வியாபாரிகள் அம்மாநிலத்துக்கு பூசணியை விற்பனைக்கு அனுப்பி வருகின்றனர். பூசணிக்காய்களை, அதிக நாட்கள் இருப்பு வைக்கலாம் என்பதால், பிற மாநிலங்களுக்கு, விற்பனைக்கு எளிதாக அனுப்ப முடிகிறது.
இவ்வாறு, தெரிவித்தனர்.