Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ சுத்தம், சுகாதாரம் விதிமீறும் 'டாஸ்மாக்' பார்கள்!  

சுத்தம், சுகாதாரம் விதிமீறும் 'டாஸ்மாக்' பார்கள்!  

சுத்தம், சுகாதாரம் விதிமீறும் 'டாஸ்மாக்' பார்கள்!  

சுத்தம், சுகாதாரம் விதிமீறும் 'டாஸ்மாக்' பார்கள்!  

ADDED : ஜூன் 07, 2025 11:20 PM


Google News
திருப்பூர்: டாஸ்மாக் மதுக்கடை 'பார்' நடத்த உரிமம் பெறுதல், போதிய காற்றோட்டம், மின்சாரம், கழிப்பிடம், 'பார்' கட்டட உறுதி சான்று, அவசர கால வழி, தீ பாதுகாப்பு முறை, பணியாளர்களுக்கு அடையாள அட்டை மற்றும் மருத்துவத் தகுதி சான்று அவசியமாகும். அதேபோல், கழிவு பாட்டில்கள், அட்டைப் பெட்டிகள், வீணாகும் உணவுகளை ஆங்காங்கே கொட்டக்கூடாது. தவிர, துர்நாற்றம் மற்றும் தொற்று நோய் பரவும் நிலையில் சுகாதார சீர்கேடு இருத்தல் கூடாது என்பது விதியாகும்.

இதுதவிர, பாதுகாப்பான குடிநீர், கை கழுவ 'வாஷ் பேசின்', கழிவுநீர் செல்வதற்கு ஏதுவான வழி, போதிய இடவசதி, கழிவுகளை நேரடியாக உள்ளாட்சி நிர்வாகத்திடம் ஒப்படைத்தல் போன்ற நிபந்தனைகளும் உள்ளன.

ஆனால், விதிகளை சரிவர பின்பற்றாமலேயே டாஸ்மாக் 'பார்கள் செயல்படுகின்றன. சரிவர கழிப்பறை வசதி ஏற்படுத்தாத 'பார்களில் இருந்து, கழிவுகள் வெளியேறி துார்நாற்றம் வீசுவதால், அருகே உள்ள கடைக்காரர்கள் சிரமப்படுகின்றனர். துறை ரீதியான அதிகாரிகள் 'கவனிப்பு' பெறுதல், ஆளும்கட்சி முக்கிய பிரமுகர்களின் 'ஆசி' போன்ற காரணங்களால், 'பார்' நடத்துவோர், அலட்சியப் போக்குடன் செயல்படுகின்றனர். சில பார்களில், சேகரமாகும் குப்பை மற்றும் கழிவு அனைத்துமே திறந்தவெளியில் கொட்டப்படுகிறது. விதிமீறல் டாஸ்மாக் 'பார்'களை கண்டறிந்து, அதனை மூடுவதற்கு கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us