/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ நிறுவனம் ஊக்குவிப்பு தமிழக அரசு விருது நிறுவனம் ஊக்குவிப்பு தமிழக அரசு விருது
நிறுவனம் ஊக்குவிப்பு தமிழக அரசு விருது
நிறுவனம் ஊக்குவிப்பு தமிழக அரசு விருது
நிறுவனம் ஊக்குவிப்பு தமிழக அரசு விருது
ADDED : ஜூன் 12, 2025 11:13 PM
திருப்பூர்; தமிழகத்தில், சமுதாய பொறுப்பு நிதி செலவழித்து, சமூக பொருளாதார மேம்பாட்டு பணிகளில், பாராட்டத்தக்க வகையில் ஈடுபடும் தனியார், பொதுத்துறை, கூட்டுறவுத்துறை நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில், தமிழக அரசு விருது அறிவித்தது.
மாவட்டத்துக்கு ஒன்று வீதம், சிறப்பாக பணிபுரிந்த தொழில் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படுகிறது. ஒரு லட்சம் ரூபாய் பரிசுத்தொகை மற்றும் நற்சான்றிதழ் வழங்கப்படும்.
விவசாயம், கால்நடை, கல்வி, பொது சுகாதாரம், குடிநீர், மழை நீர் சேகரிப்பு, மரபுசாரா எரிசக்தி, வேளாண் பொருட்கள் சந்தைப்படுத்துதல், சுய உதவிக்குழுக்கள் மற்றும் வாழ்வாதார மேம்பாடு, பெண்கள், குழந்தைகள், இளைஞர் நலன், மரக்கன்று நடுதல் ஆகிய பணிகள் செய்த நிறுவனங்கள் பரிசீலிக்கப்படும்.
அந்தந்த மாவட்டத்தில், ஊரக பகுதிகளில் கடந்த ஓராண்டில் மேற்கொண்ட பணிகள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும். இவ்விருது பெற, www.tnrd.tn.gov.in என்ற இணையத்தில், விண்ணப்பத்தை பதிவேற்றலாம்.