ADDED : ஜூன் 12, 2025 11:14 PM
அவிநாசி; ''அவிநாசி நகராட்சிக்குட்பட்ட மாநில நெடுஞ்சாலை, நகராட்சிக்கு சொந்தமான சாலைகள் மற்றும் பொது இடங்களில் வைத்துள்ள கொடி கம்பங்களை மூன்று தினங்களுக்குள், அந்தந்த கட்சியினர் மற்றும் கொடிக்கம்பங்கள் நிறுவியவர்கள் தாங்களாகவே அகற்ற வேண்டும்.
இல்லையென்றால் கலெக்டர் உத்தரவின் பேரில் அகற்றப்படாத கொடிக்கம்பங்கள் நகராட்சி ஊழியர்களால் அகற்றப்பட்டு அதற்கான செலவுத் தொகையை கொடிக்கம்பங்களின் சம்பந்தப்பட்ட நபர்களிடமிருந்து வசூலிக்கப்படும்'' என அவிநாசி நகராட்சி ஆணையர் வெங்கடேஸ்வரன் தெரிவித்துள்ளார்.