/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/செயற்கை நுாலிழை பின்னலாடை உற்பத்தி வேகம் பெறும்! துணி நேரடி வினியோகத்திட்டம் உருவாகிறதுசெயற்கை நுாலிழை பின்னலாடை உற்பத்தி வேகம் பெறும்! துணி நேரடி வினியோகத்திட்டம் உருவாகிறது
செயற்கை நுாலிழை பின்னலாடை உற்பத்தி வேகம் பெறும்! துணி நேரடி வினியோகத்திட்டம் உருவாகிறது
செயற்கை நுாலிழை பின்னலாடை உற்பத்தி வேகம் பெறும்! துணி நேரடி வினியோகத்திட்டம் உருவாகிறது
செயற்கை நுாலிழை பின்னலாடை உற்பத்தி வேகம் பெறும்! துணி நேரடி வினியோகத்திட்டம் உருவாகிறது
ADDED : செப் 21, 2025 11:46 PM

திருப்பூர்: திருப்பூர் பின்னலாடை உற்பத்தியாளர்களுக்கு தேவையான, தரமான செயற்கை நுாலிழை பின்னல் துணியை, குறைந்த விலைக்கு வினியோகிக்கும் திட்டத்தை இந்திய துணி உற்பத்தியாளர்கள் முன்வைத்துள்ளனர். ''இத்திட்டம் செயல்பாட்டுக்கு வந்தால், செயற்கை நுாலிழை பின்னலாடைகள் உற்பத்தியை வேகப்படுத்த முடியும்'' என்கின்றனர் ஏற்றுமதியாளர்கள்.
நாடு முழுவதும் உள்ள துணி உற்பத்தியாளர்கள் இணைந்து, இந்திய துணி உற்பத்தியாளர்கள் சங்கம் (சி.எம்.ஏ.ஐ.,) என்ற அமைப்பாக செயல்பட்டு வருகின்றனர். இவர்கள் ஆண்டுக்கு, 20 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு, துணிகளை உற்பத்தி செய்து நாடு முழுவதும் விற்பனை செய்து வருகின்றனர்.
செயற்கை நுாலிழை துணி உற்பத்தியில் கவனம்
இந்திய துணி உற்பத்தியாளர்கள், பருத்தி நுாலிழை துணிகளை காட்டிலும், செயற்கை நுாலிழை துணி உற்பத்தியில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர்.
பாலியஸ்டர், நைலான் போன்ற நுால்களை காட்டிலும், ஒருமுறை பயன்படுத்தி துாக்கி எறியும் பிளாஸ்டிக் பாட்டில் உள்ளிட்ட பொருட்களை கொண்டும், செயற்கை நுாலிழை தயாரிப்பு வெற்றியடைந்துள்ளது. இத்தகைய நுாலிழைகளை, தண்ணீர் பயன்பாடே இல்லாமல், சாயமிட்டும் சாதனை படைத்துள்ளனர்.
வடமாநிலங்களுக்கான ஜவுளி உற்பத்தியாளர்களுக்கு, இந்திய துணி உற்பத்தியாளர்கள் சங்க உறுப்பினர்கள் தான், முக்கியமான துணி
வினியோகஸ்தர்களாக இருக்கின்றனர். தமிழகத்தில் உள்ள ஜவுளி உற்பத்தியாளர்களுடன் கரம் கோர்த்து, தென்கோடி வரை, துணி வியாபாரத்தை விரிவாக்க திட்ட மிட்டுள்ளனர்.
துணி உற்பத்தியாளர்களுடன்பேச்சுவார்த்தை துவக்கம்
நாட்டின் பின்னலாடை தொழில் நகரம் என்றழைக்கப்படும் திருப்பூருடன், நேரடியாக வர்த்தகம் செய்ய விரும்பி, தேடி வரத்துவங்கியுள்ளனர். 'உங்களுக்கு தேவையான செயற்கை நுாலிழை மற்றும் பருத்தி நுாலிழை பின்னல் துணி ரகங்களை நாங்கள் கொடுக்கிறோம்; எங்கள் பகுதியில், ஆடை உற்பத்தியை துவக்க பங்களிப்பு செய்யுங்கள்' என்று பேச்சுவார்த்தையை துவக்கியுள்ளனர்.
கடந்த ஜூன் மாதம், தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்கத்தினருடன்(சைமா) பேசிய, இந்திய துணி உற்பத்தியாளர் சங்க பிரதிநிதிகள், கடந்தவாரம், திருப்பூர் ஏற்றுமதியாளர்களையும் சந்தித்து பேசியுள்ளனர். குறிப்பாக, திருப்பூரில் அலுவலகம் அமைத்து, பின்னலாடை தொழில்துறையினருடன் இணைந்து செயலாற்ற விருப்பம் தெரிவித்துள்ளனர்.
இத்திட்டம் உரிய வடிவம் பெற்று, செயல்பாட்டுக்கு வருமானால், செயற்கை நுாலிழை பின்னலாடைகள் உற்பத்தி வேகம் பெறும் என்கின்றனர் ஏற்றுமதியாளர்கள்.