/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ பட்டுக்கூடு வளர்ப்பு பயிற்சியளித்த மாணவியர் பட்டுக்கூடு வளர்ப்பு பயிற்சியளித்த மாணவியர்
பட்டுக்கூடு வளர்ப்பு பயிற்சியளித்த மாணவியர்
பட்டுக்கூடு வளர்ப்பு பயிற்சியளித்த மாணவியர்
பட்டுக்கூடு வளர்ப்பு பயிற்சியளித்த மாணவியர்
ADDED : மே 11, 2025 11:52 PM

உடுமலை; பணி அனுபவ திட்டத்தின் கீழ், கிராமத்தில் தங்கி, வெண்பட்டுக்கூடு வளர்ப்பு குறித்து வனக்கல்லுாரி மாணவியர் விவசாயிகளுக்கு பயிற்சியளித்தனர்.
மேட்டுப்பாளையம் வனக்கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் பட்டுப்புழுவியல் துறையில், நான்காம் ஆண்டு படிக்கும் மாணவியர், பணி அனுபவ திட்டத்தின் கீழ், உடுமலை ஜல்லிபட்டியில் தங்கி பயிற்சி பெற்றனர்.
இத்திட்டத்தின் கீழ், ஜல்லிபட்டியை சேர்ந்த பரமசிவம் என்ற விவசாயி, புழு வளர்ப்பு மனையில், புழு வளர்ப்பு பணிகளை மேற்கொண்டனர்.
மேலும், கோடை காலத்தில், மல்பெரி மற்றும் பட்டுக்கூடு மேலாண்மை பயிற்சியை, மாணவியர், சிவரஞ்சனி, சவுமியா, சுபஸ்ரீ, தாபியா, தங்கமயில்லம்மாள், விஷ்ணுபிரியா ஆகியோர் விவசாயிகளுக்கு வழங்கினர்.
இப்பயிற்சியில், 250 முட்டை தொகுதி புழுக்களை வளர்த்து, 210 கிலோ வெண்பட்டுக்கூடுகளை அறுவடை செய்தனர்.