Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ பராமரிப்பில்லாத பாசன கால்வாய் புதுப்பிக்க கோரிக்கை 

பராமரிப்பில்லாத பாசன கால்வாய் புதுப்பிக்க கோரிக்கை 

பராமரிப்பில்லாத பாசன கால்வாய் புதுப்பிக்க கோரிக்கை 

பராமரிப்பில்லாத பாசன கால்வாய் புதுப்பிக்க கோரிக்கை 

ADDED : மே 11, 2025 11:52 PM


Google News
உடுமலை; நான்காம் மண்டல பாசனம் துவங்கும் முன், சிதிலமடைந்துள்ள கால்வாய் கரைகளை சீரமைக்க வேண்டும் என, விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

பி.ஏ.பி., பாசனத்திட்டத்தில், நான்கு மண்டலமாக விளைநிலங்கள் பிரிக்கப்பட்டு, திருமூர்த்தி அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படுகிறது.

இதில், பிரதான கால்வாயில் இருந்து பிரியும், உடுமலை கால்வாயில், நான்கு மண்டலங்களிலும் பாசனத்துக்கு தண்ணீர் வழங்கப்படுகிறது.

தொடர் பயன்பாடு, பராமரிப்பு இல்லாதது உட்பட காரணங்களால், உடுமலை கால்வாய் பல இடங்களில், பரிதாப நிலையில் காணப்படுகிறது.

மொத்தமாக, 30 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான விளைநிலங்களில், பாசன ஆதாரமான கால்வாய் பல ஆண்டுகளாக புதுப்பிக்கப்படாதது, விவசாயிகளை வேதனையடைய செய்துள்ளது.

உடுமலை கால்வாயை முழுமையாக புதுப்பிக்க, பொதுப்பணித்துறை சார்பில், பல ஆண்டுகளுக்கு முன்பே கருத்துரு அனுப்பப்பட்டது. ஆனால், நிதி ஒதுக்கீடு கிடைக்கவில்லை.

இதனால், கால்வாய் கரை புதுப்பிக்கப்படாமல், வலுவிழந்து, தண்ணீர் விரயம் அதிகரித்துள்ளது. நகரை ஒட்டிய பகுதிகளில், கரை உடையும் நிலையில் காணப்படுகிறது.

படுமோசமாக இருந்த சில இடங்கள் மட்டும் தேர்வு செய்யப்பட்டு, அடிப்படை பராமரிப்பு பணிகள் பொதுப்பணித்துறையால் மேற்கொள்ளப்பட்டது.

இருப்பினும், முழுமையாக கால்வாயை புதுப்பிப்பதே, பல ஆயிரம் ஏக்கர் விவசாயத்தை பாதுகாப்பதாக இருக்கும். அரசு இது குறித்து பரிசீலித்து நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

நான்கு மண்டல பாசனத்துக்கும் கால்வாயில் தண்ணீர் செல்வதால், ஒவ்வொரு பாசன காலத்துக்குமான இடைவெளியில், புதுப்பிப்பு பணிகளை செய்யலாம் என விவசாயிகள் அரசை வலியுறுத்தியுள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us