/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ ஐ.டி.ஐ.,-ல் சேர மாணவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு ஐ.டி.ஐ.,-ல் சேர மாணவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு
ஐ.டி.ஐ.,-ல் சேர மாணவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு
ஐ.டி.ஐ.,-ல் சேர மாணவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு
ஐ.டி.ஐ.,-ல் சேர மாணவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு
ADDED : மே 22, 2025 03:34 AM
திருப்பூர்; அரசு தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் பிரபு அறிக்கை:
திருப்பூர் மாவட்டத்தில், தாராபுரம், உடுமலை அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் ஆன்லைனில் பெறப்பட்டு வருகின்றன; விண்ணப்பிக்க, ஜூன் 13ம் தேதி கடைசி நாள்.
பொறியியல் மற்றும் பொறியியல் அல்லாத தொழிற்பயிற்சி பிரிவுகளில் சேர, எட்டாம் வகுப்பு கல்வித்தகுதி போதுமானது. மேல்நிலை கல்வி மற்றும் உயர்கல்வி பெற்றவர்கள், 14 வயது முதல் 40 வயதுக்கு உட்பட்ட ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.
கடந்த 2021ல், பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், ஒன்பதாம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் கொண்டுவந்து விண்ணப்பிக்கலாம். www.skilltraninig.gov.in என்கிற தளத்தில் விண்ணப்பிக்கலாம்.
பயிற்சி காலத்தின்போது, தமிழக அரசின் இலவச சீருடை, சைக்கிள், பாட புத்தகங்கள், வரைபட கருவிகள், காலணி, இலவச பஸ் பாஸ் வழங்கப்படும். அனைத்து மாணவர்களுக்கும், மாதந்தோறும், 750 ரூபாய் உதவித்தொகை, ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்த மாணவ, மாணவியருக்கு, தமிழ் புதல்வன், புதுமைப்பெண் திட்டங்களில் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.
பயிற்சி முடித்து, தேர்ச்சி பெறுவோருக்கு, முன்னணி நிறுவனங்களில் வேலைவாய்ப்பும் பெற்றுத்தரப்படுகிறது. ஒரிஜினல் மதிப்பெண் சான்று, மாற்றுச்சான்று, சாதி சான்று, ஆதார் கார்டு, விண்ணப்ப கட்டணம் 50 ரூபாயுடன் அருகிலுள்ள தொழிற்பயிற்சி நிலையங்களுக்கு, நேரில் சென்றும் விண்ணப்பிக்கலாம்.
விவரங்களுக்கு, 94990 55695, 94990 55700, 94990 55698, 81247 12445 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.