/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ பிளாஸ்டிக் பாட்டில்கள் வீசுவதை தடுக்க யுத்தி பிளாஸ்டிக் பாட்டில்கள் வீசுவதை தடுக்க யுத்தி
பிளாஸ்டிக் பாட்டில்கள் வீசுவதை தடுக்க யுத்தி
பிளாஸ்டிக் பாட்டில்கள் வீசுவதை தடுக்க யுத்தி
பிளாஸ்டிக் பாட்டில்கள் வீசுவதை தடுக்க யுத்தி
ADDED : ஜூன் 05, 2025 01:45 AM

பல்லடம்; குடிநீர், குளிர்பானம், உணவுப் பொருட்கள் என, அனைத்திலும் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்துவிட்டது. குறிப்பாக, ஒருமுறை மட்டுமே பயன்படுத்தி வீசி எறியப்படும் பிளாஸ்டிக் பாட்டில், டம்ளர் போன்றவற்றால் சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது.
கழிவு நீர் கால்வாய்கள் மற்றும் பாசன வாய்க்கால்களிலும் கூட பிளாஸ்டிக் பாட்டில்கள் தான் ஆக்கிரமித்துள்ளன.
பயன்படுத்திய பின் வீசி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களை சேகரிக்க பல்லடம் பஸ் ஸ்டாண்டில் நகராட்சி சார்பில் கூண்டு வைக்கப்பட்டுள்ளது. இது, பிளாஸ்டிக் பாட்டிலை போன்றே வடிவமைக்கப்பட்டு, பொதுமக்கள், பயன்படுத்திய பிளாஸ்டிக் பாட்டில்களை எளிதில் உள்ளே போடும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.
இதனால், பொது இடங்களில் வீசி எறியப்படும் பிளாஸ்டிக் பாட்டில்களின் எண்ணிக்கை குறைய வாய்ப்பு உள்ளது. நகராட்சியின் இந்த நுாதன முயற்சி வரவேற்கத்தக்கதாக உள்ளது.
மார்க்கெட், கடைவீதி, மருத்துவமனை, பஸ் ஸ்டாப் உள்ளிட்ட இடங்களிலும் இதை வைப்பதன் மூலம், பொது இடங்களில் பிளாஸ்டிக் பாட்டில்கள் துாக்கி எறியப்படுவது வெகுவாக குறைய வாய்ப்பு உள்ளது.