/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/போதை இல்லா தமிழகம் உருவாக்க நடவடிக்கை :ஹிந்து முன்னணி எதிர்பார்ப்புபோதை இல்லா தமிழகம் உருவாக்க நடவடிக்கை :ஹிந்து முன்னணி எதிர்பார்ப்பு
போதை இல்லா தமிழகம் உருவாக்க நடவடிக்கை :ஹிந்து முன்னணி எதிர்பார்ப்பு
போதை இல்லா தமிழகம் உருவாக்க நடவடிக்கை :ஹிந்து முன்னணி எதிர்பார்ப்பு
போதை இல்லா தமிழகம் உருவாக்க நடவடிக்கை :ஹிந்து முன்னணி எதிர்பார்ப்பு
ADDED : ஜன 05, 2024 01:39 AM
திருப்பூர்;''போதை இல்லாத தமிழகத்தை உருவாக்க தமிழக அரசு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்,'' என்று, ஹிந்து முன்னணி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அதன் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் அறிக்கை:
தமிழகத்தில் சமீப காலமாக போதை பொருள்களின் புழக்கம் அதிகமாகி உள்ளது. தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக மதுகுடிப்போரின் எண்ணிக்கை அதிகமாகி உள்ளது. நேற்று (நேற்று முன்தினம்) சென்னை கல்லுாரியில் மாணவர் ஒருவர் போதை ஊசி பயன்படுத்தியதால், அவர் உடல்நிலை மோசமாகியது. அவர் அளித்த புகாரின் பேரில், போதை ஊசி விற்பனை செய்த, அதே கல்லுாரி மாணவனை போலீசார் கைது செய்தனர்.
இவ்வாறு பல கல்லுாரிகளில் படிக்கும் மாணவர்களே கஞ்சா விற்பனை செய்வது அதிர்ச்சி மேல், அதிர்ச்சி அளிக்கிறது. இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு தமிழகத்தில் நுழைந்து வரும் பல்வேறு விதமான போதை பொருள்களும் முற்றுப்புள்ளி வைக்க அரசு முன்வர வேண்டும்.
லஞ்சம் வாங்கி கொண்டு, போதை பொருள்களை விற்பனை செய்ய அனுமதிக்கும் அதிகாரிகளை பதவி நீக்கம் செய்ய வேண்டும். கடுமையான சட்டம் வாயிலாக போதை பொருள்களை முற்றிலுமாக ஒழித்து போதை இல்லாத தமிழகத்தை உருவாக்க வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.