/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ விஜயாபுரம் துவக்கப்பள்ளிக்கு ஸ்ரீபுரம் அறக்கட்டளை உதவி விஜயாபுரம் துவக்கப்பள்ளிக்கு ஸ்ரீபுரம் அறக்கட்டளை உதவி
விஜயாபுரம் துவக்கப்பள்ளிக்கு ஸ்ரீபுரம் அறக்கட்டளை உதவி
விஜயாபுரம் துவக்கப்பள்ளிக்கு ஸ்ரீபுரம் அறக்கட்டளை உதவி
விஜயாபுரம் துவக்கப்பள்ளிக்கு ஸ்ரீபுரம் அறக்கட்டளை உதவி
ADDED : மே 23, 2025 12:23 AM

திருப்பூர் : திருப்பூர் ஸ்ரீபுரம் அறக்கட்டளை, 'மூன்றாவது கண்' திட்டம் மூலம், மக்களின் பாதுகாப்புக்காக போலீசாருடன் இணைந்து, நகரில் பிரதான பகுதிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தி செயல்பட்டு வருகிறது.
இதுதவிர, அரசு பள்ளி மற்றும் கல்லுாரிகளின் கட்டமைப்பு, பாதுகாப்புக்கு தேவையான நிதியுதவி, உபகரணங்களை வழங்கி கைகொடுத்துவருகிறது. விஜயாபுரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி அலுவலக பயன்பாட்டுக்காக, ஸ்ரீபுரம் அறக்கட்டளை சார்பில், 70 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான லேப்டாப் மற்றும் பிரின்டர் வழங்கப்பட்டுள்ளது.
நேற்று நடந்த நிகழ்ச்சியில், ஸ்ரீபுரம் அறக்கட்டளை தலைவர் ஜெயசித்ரா சண்முகம், செயலாளர் காண்டீபன், பொருளாளர் மெஜஸ்டிக் கந்தசாமி, நிப்ட்-டீ கல்லுாரி தலைமை ஆலோசகர் ராஜா சண்முகம், ஆலோசகர் முருகசாமி ஆகியோர், லேப்டாப் மற்றும் பிரின்டரை பள்ளிக்கு வழங்கினர். இவற்றை தலைமை ஆசிரியர் ஜோயல் விமலகாந்தன், ஆசிரியர்கள் ராதா, மகேஸ்வரி, ஹெலன், பிரியா பெற்றுக்கொண்டனர்.