/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ஸ்ரீமாகாளியம்மன் கோவில் குண்டம் திருவிழா கோலாகலம்ஸ்ரீமாகாளியம்மன் கோவில் குண்டம் திருவிழா கோலாகலம்
ஸ்ரீமாகாளியம்மன் கோவில் குண்டம் திருவிழா கோலாகலம்
ஸ்ரீமாகாளியம்மன் கோவில் குண்டம் திருவிழா கோலாகலம்
ஸ்ரீமாகாளியம்மன் கோவில் குண்டம் திருவிழா கோலாகலம்
ADDED : ஜன 04, 2024 12:11 AM

அவிநாசி : அவிநாசி ஒன்றியம், நம்பியாம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட கரையப்பாளையம் ஸ்ரீமாகாளியம்மன் கோவிலில் குண்டம் திருவிழா நடைபெற்றது.
முன்னதாக, கடந்த, 27ம் தேதி கோவில் வளாகத்தில் பட்டத்தரசி அம்மனுக்கு பொங்கல் வைத்தல் நிகழ்ச்சியும், முருகப்பெருமானுக்கு கொடியேற்றுதல், சாமி சாட்டுதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதற்காக 2ம் தேதி குண்டம் பூ போடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
நேற்று, குண்டம் திருவிழாவை முன்னிட்டு அம்மை அழைத்தல், குதிரை வாகனத்தில் அம்மன் பவனி வருதல் ஆகிய நிகழ்ச்சிகளை தொடர்ந்து நுாற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் குண்டம் இறங்கி, நேர்த்திக்கடன் செலுத்தினர்.
அதன்பின், ஆலங்காட்டுபாளையம் சித்தி விநாயகர் கோவிலில் இருந்து 100க்கும் மேற்பட்ட பெண்கள் மாவிளக்கு எடுத்து மாகாளியம்மன் கோவிலுக்கு ஊர்வலமாகச் சென்றனர்.
இன்று மஞ்சள் நீராட்டுடன் குண்டம் திருவிழா நிறைவு பெறுகிறது. கரையப்பாளையம் ஊர் மக்கள் மற்றும் கோவில் விழா குழுவினர் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.