/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ 'கசக்கும்' கணக்கு: இனிக்கும் 'பி.காம்.,' 'கசக்கும்' கணக்கு: இனிக்கும் 'பி.காம்.,'
'கசக்கும்' கணக்கு: இனிக்கும் 'பி.காம்.,'
'கசக்கும்' கணக்கு: இனிக்கும் 'பி.காம்.,'
'கசக்கும்' கணக்கு: இனிக்கும் 'பி.காம்.,'
ADDED : ஜூன் 13, 2025 11:09 PM
அரசு, அரசு உதவி பெறும் கல்லுாரிகளில் இளங்கலை பட்டப்படிப்பில் இணைய, ஜூன், 2ல் சிறப்பு பிரிவுக்கும், அதனை தொடர்ந்து ஜூன், 4 முதல் பொதுப்பிரிவினருக்கும் கவுன்சிலிங் நடந்து வருகிறது.
ஆயிரக்கணக்கில் விண்ணப்பங்கள் குவிந்தாலும், பி.காம்., பி.காம். சி.ஏ., இரண்டில் ஏதேனும் ஒன்று தான் வேண்டும் என ஐந்தில் மூன்று விண்ணப்பதாரர் கேட்பதாக, கல்லுாரி பேராசிரியர்கள் கூறுகின்றனர். இந்த பிரிவு கிடைக்காவிடில், வேறு படிப்புகளை பற்றி கேட்காமல், பி.காம்., உள்ள வேறு கல்லுாரிக்கே பலர் சென்று விடுகின்றனர்.
அதேநேரம், கணிதம், இயற்பியல், நுண்ணுயிரியல், வேதியியல் உள்ளிட்ட பாடங்களில் இடங்கள் இருந்தும் தேர்வு செய்யாமல் பலர் தவிர்த்து வருகின்றனர்.
அவ்வகையில், 'திருப்பூர் சிக்கண்ணா கல்லுாரியில் மொத்தமுள்ள, 1,008 இடங்களில், 900 இடங்கள் பத்து நாள் கவுன்சிலிங்கில் பூர்த்தி செய்யப்பட்டு விட்டது. வணிகவியல் சார்ந்த பாடத்தில் நான்கு இடம் மட்டுமே உள்ளது. அதே நேரம், விலங்கியலில், 10, இயற்பியலில், 15, வேதியியல், 19, கணிதத்தில், 32 உட்பட, 110 இடங்கள் காலியாக உள்ளது; பி.காம்., மற்றும் பி.காம்.,சி.ஏ., 'சீட்' நிரம்பி விட்டது.
திருப்பூர், எல்.ஆர்.ஜி., கல்லுாரியில், 904 இடங்களில், 184 இடங்கள் மட்டுமே உள்ளது. வணிகவியல், கம்ப்யூட்டர் சயின்ஸ், பி.காம்., சி.ஏ., உணவியல் மற்றும் ஊட்டச்சத்தியல் துறைகளை அதிக மாணவியர் தேர்வு செய்துள்ளனர். கணிதம், வேதியியல், இயற்பியல் உட்பட அறிவியல் பாடங்களில் இன்னமும் இடங்கள் உள்ளது.
தமிழ், ஆங்கிலம் மீது ஆர்வம்
கடந்த, 12ம் தேதி தமிழ் இலக்கியம், நேற்று ஆங்கில இலக்கியம் கவுன்சிலிங் நடந்தது. மாவட்டத்தில், அதிக இடங்களை கொண்ட இரண்டு அரசு கலைக் கல்லுாரிகளிலும் தமிழ், ஆங்கில மொழிப்பாடங்களை ஆர்வமுடன் மாணவர்கள் தேர்வு செய்துள்ளனர்.
- அரசு கல்லுாரி பேராசிரியர்கள்.