/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ விபத்து தவிர்க்க வேகத்தடை பெற்றோர் - மாணவர் நிம்மதி விபத்து தவிர்க்க வேகத்தடை பெற்றோர் - மாணவர் நிம்மதி
விபத்து தவிர்க்க வேகத்தடை பெற்றோர் - மாணவர் நிம்மதி
விபத்து தவிர்க்க வேகத்தடை பெற்றோர் - மாணவர் நிம்மதி
விபத்து தவிர்க்க வேகத்தடை பெற்றோர் - மாணவர் நிம்மதி
ADDED : செப் 21, 2025 06:30 AM

அவிநாசி : சேவூர் - கைகாட்டி சாலையில், வேகத்தடை இல்லாததால், பள்ளி குழந்தைகள் விபத்தில் சிக்கும் வாய்ப்புள்ளது என்ற புகாரை தொடர்ந்து, வேகத்தடை அமைக்கப்பட்டது.
அவிநாசி - புளியம்பட்டி சாலையில், தினமும் நுாற்றுக்கணக்கான வாகனங்கள் அதிவேகமாக இயக்கப்படுகின்றன. சேவூர் - கைகாட்டி கூட்டுறவு வங்கி பகுதியில், 900க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கும் அரசு பள்ளிகளும், எதிரில் அரசு மருத்துவமனையும் உள்ளது. அதிவேகமாக செல்லும் வாகனங்களால் பள்ளிக் குழந்தைகள், பொதுமக்கள் விபத்தில் சிக்கும் அபாயம் இருக்கிறது; சிறு, சிறு விபத்துகள் நடக்கின்றன எனவும்,'இங்கு வேகத்தடை அமைக்க வேண்டும்' எனவும், அப்பகுதி மக்கள் சார்பில் உழவர் சிந்தனை பேரமைப்பு ஒருங்கிணைப்பாளர் பரமேஸ்வரன் கூறியிருந்தார்.
இதுதொடர்பான செய்தி, 'தினமலர்' நாளிதழில் வெளியானது. விளைவாக, சேவூர் கூட்டுறவு வங்கி அருகில், வேகத்தடை அமைக்கப்பட்டிருக்கிறது. இதற்கு வரவேற்பு தெரிவித்துள்ள உழவர் சிந்தனை பேரமைப்பு, விபத்து ஏற்படும் வாய்ப்புள்ள பிற இடங்களிலும், வேகத்தடை அமைக்க வேண்டும் என, வலியுறுத்தியுள்ளது.