/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ சமூகப்பொறுப்புணர்வு; காலத்தின் கட்டாயம் சமூகப்பொறுப்புணர்வு; காலத்தின் கட்டாயம்
சமூகப்பொறுப்புணர்வு; காலத்தின் கட்டாயம்
சமூகப்பொறுப்புணர்வு; காலத்தின் கட்டாயம்
சமூகப்பொறுப்புணர்வு; காலத்தின் கட்டாயம்
ADDED : ஜூன் 05, 2025 01:35 AM

அமெரிக்காவின் ஸ்டான்போர்டு பல்கலை வெளியிட்ட உலகின் முன்னணி விஞ்ஞானிகளின் பட்டியலில் இடம் பெற்ற தமிழக விஞ்ஞானியான அசோக்குமார், சென்னை சவீதா பல்கலையில், கழிவு மேலாண்மை மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மைய பேராசிரியர் மற்றும் தலைவராக உள்ளார்.அவர் கூறியதாவது:
சென்னை, கோவை, திருப்பூர் போன்ற நகரங்களில், 60 சதவீதத்துக்கும் மேற்பட்ட கால்நடைகள் பாலிதீன் கழிவுகளை உட்கொள்வதால் செரிமான அடைப்பு, ஊட்டச்சத்து குறைபாடு, புண் மற்றும் இரைப்பை பிரச்னையால் பாதிக்கப்படுகின்றன என, கடந்தாண்டு நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது.
இவற்றின் பால் மற்றும் இறைச்சியை மனிதர்கள் பயன்படுத்துவதன் வாயிலாக, அதில் கலந்துள்ள 'மைக்ரோ பிளாஸ்டிக்' புற்றுநோய் மற்றும் உயிர்க்கொல்லி நோய்களை உருவாக்கும்.கழிவுகளை உண்ணும் கால்நடைகளின் சாணம் வழியாக வெளியேறும் நச்சு, மண் வளத்தையும் நாசமாக்கும்; நச்சு நிறைந்த சாணம், நீர்நிலைகளில் கலக்கும் போது, நீரும் மாசுபடும். எனவே, கால்நடை பாதுகாப்பு சட்டங்களை கடுமையாக பின்பற்ற வேண்டும்.
கால்நடைகளுக்கு மேய்ச்சல் நிலங்களை உறுதிப்படுத்த வேண்டும். மக்கும் குப்பை, மக்காத குப்பையை தரம் பிரித்து, மேலாண்மை திட்டத்தை திறம்பட செய்ய வேண்டும். திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை, மத்திய, மாநில அரசுகள் சரியாக கட்டமைத்திருப்பினும், அவற்றின் செயல்பாடு பலவீனமாகவே உள்ளது. நிறுவனங்களும், சமூக பொறுப்புணர்ந்து, குப்பை மேலாண்மையில் கவனம் செலுத்த வேண்டும்.