ADDED : செப் 02, 2025 11:07 PM
திருப்பூர்; திருப்பூர் மாவட்ட கலெக்டர் மனீஷ் நாரணவரே வெளியிட்டுள்ள அறிக்கை:
திருப்பூர் மாவட்டத்தில், ரேஷன் பொருட்கள் கடத்தல் வழக்குகளில் கைப்பற்றப்பட்டு, அபராதம் செலுத்தாத ஏழு வாகனங்கள் வரும், 12ம் தேதி ஏலம் விடப்பட உள்ளன.
திருப்பூர் தெற்கு தாலுகா, வீரபாண்டி, ராஜாநகர், பலவஞ்சிபாளையம் ரோட்டிலுள்ள குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் குற்ற புலனாய்வுத்துறை காவல் ஆய்வாளர் அலுவலகத்தில், காலை, 10:00 மணிக்கு பொது ஏலம் நடைபெறும். டூவீலர்கள் 3 மற்றும் கார், சரக்கு வாகனங்கள் 4 ஆகியவை ஏலமிடப்படுகின்றன. விருப்பமுள்ளோர் ஏலத்தில் பங்கேற்கலாம்.
இவ்வாறு கலெக்டர் அறிவித்துள்ளார்.