/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/சம்பள உயர்வு வழங்க வேண்டும்; துாய்மை பணியாளர் 'ஸ்டிரைக்' சம்பள உயர்வு வழங்க வேண்டும்; துாய்மை பணியாளர் 'ஸ்டிரைக்'
சம்பள உயர்வு வழங்க வேண்டும்; துாய்மை பணியாளர் 'ஸ்டிரைக்'
சம்பள உயர்வு வழங்க வேண்டும்; துாய்மை பணியாளர் 'ஸ்டிரைக்'
சம்பள உயர்வு வழங்க வேண்டும்; துாய்மை பணியாளர் 'ஸ்டிரைக்'
ADDED : ஜூன் 26, 2024 02:34 AM

திருப்பூர்;கோர்ட் உத்தரவுப்படி, துாய்மை பணியாளர்களுக்கு சம்பள உயர் வழங்க கோரி, திருப்பூரில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி துாய்மை பணியாளர்கள் நேற்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
மாநகராட்சி, நகராட்சிகளில் பணிபுரியும் துாய்மை பணியாளர்களுக்கு குறைந்தபட்ச சம்பளம் நிர்ணயித்து வழங்க கோர்ட் உத்தரவிட்டுள்ளது. ஆனாலும், உள்ளாட்சி நிர்வாகங்கள் குறைந்த ஊதியம் வழங்குவதால், திருப்பூர் மாவட்டத்திலுள்ள, மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி துாய்மை பணியாளர், குடிநீர், வாகன ஓட்டுனர்கள் நேற்று முதல் வேலை நிறுத்த போராட்டத்தை துவக்கினர்.
கலெக்டர் அலுவலகம் முன், நேற்று காலை பெருந்திரள் முறையீடு போராட்டம் நடத்தப்பட்டது. ஊரக வளர்ச்சி உள்ளாட்சி துறை ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ரங்கராஜ் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் பழனிசாமி, சி.ஐ.டி.யு., மாவட்ட தலைவர் மூர்த்தி, துணை தலைவர் உண்ணிகிருஷ்ணன், சுமை பணி தொழிலாளர் சங்க தலைவர் பாலன் முன்னிலை வகித்தனர்.
திருப்பூர் மாநகராட்சி, காங்கயம், பல்லடம், உடுமலை, திருமுருகன்பூண்டி நகராட்சி, மடத்துக்குளம், முத்துார், ஊத்துக்குளி, குன்னத்துார் பேரூராட்சிகளில் பணிபுரியும் துாய்மை பணியாளர், குடிநீர் பணியாளர், வாகன ஓட்டுனர்கள் திரளாக பங்கேற்றனர்.
தொடர்ந்து, தொழிலாளர் நல அதிகாரி தலையைில், முத்தரப்பு பேச்சு நடந்தது. அதில், முடிவு எட்டப்படாததால், இன்றும் போராட்டம் தெடாரும் என்று துாய்மை பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
------------
திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன், போராட்டம் நடத்திய துாய்மை பணியாளர்கள்.