/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ அமராவதி சர்க்கரை ஆலையை புனரமைக்க நிதி ஒதுக்கணும்: கரும்பு விவசாயிகள் சங்கம் போராட்டம் அறிவிப்பு அமராவதி சர்க்கரை ஆலையை புனரமைக்க நிதி ஒதுக்கணும்: கரும்பு விவசாயிகள் சங்கம் போராட்டம் அறிவிப்பு
அமராவதி சர்க்கரை ஆலையை புனரமைக்க நிதி ஒதுக்கணும்: கரும்பு விவசாயிகள் சங்கம் போராட்டம் அறிவிப்பு
அமராவதி சர்க்கரை ஆலையை புனரமைக்க நிதி ஒதுக்கணும்: கரும்பு விவசாயிகள் சங்கம் போராட்டம் அறிவிப்பு
அமராவதி சர்க்கரை ஆலையை புனரமைக்க நிதி ஒதுக்கணும்: கரும்பு விவசாயிகள் சங்கம் போராட்டம் அறிவிப்பு
ADDED : ஜூன் 26, 2024 02:40 AM

உடுமலை;மூடப்பட்டுள்ள அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை புனரமைப்புக்கு, உடனடியாக அரசு நிதி ஒதுக்க வலியுறுத்தி, கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக கரும்பு விவசாயிகள் சங்கத்தின், அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை கமிட்டி கூட்டம், கிருஷ்ணாபுரத்தில் நடந்தது. தலைவர் பாலதண்டாணி தலைமை வகித்தார். செயலாளர் வீரப்பன் முன்னிலை வகித்தார்.
இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்
தமிழகத்தின் முதல் கூட்டுறவு சர்க்கரை ஆலையான, அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை துவங்கி, 60 ஆண்டுகளுக்கும் மேல் ஆனதால், இயந்திரங்கள் பழுதடைந்தும், அரவைத்திறன், உற்பத்தி திறன் குறைந்தும் பெரும் பாதிப்பு ஏற்பட்டு வந்தது.
இதனை நவீனப்படுத்த வேண்டும் என, பல ஆண்டுகளாக விவசாயிகள் வலியுறுத்தி வந்த நிலையில், அரசு நிதி ஒதுக்கவில்லை. நடப்பாண்டு, முழுமையாக இயங்க முடியாத நிலையில், ஆலை மூடப்பட்டுள்ளது.
ஆலைக்கு ஒப்பந்தமிட்ட விவசாயிகளின் கரும்பு வேறு ஆலைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இதனால், கோவை, திருப்பூர், திண்டுக்கல் மாவட்டத்தில், ஆலை அங்கத்தினர்களாக உள்ள, 18 ஆயிரம் கரும்பு விவசாயிகள் பாதித்து வருகின்றனர்.
எனவே, அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையை புதுப்பிக்க, திட்ட மதிப்பீட்டு தொகையான, 8 கோடி ரூபாயை உடனடியாக அரசு ஒதுக்கி, கரும்பு விவசாயிகள் மற்றும் கூட்டுறவு சர்க்கரை ஆலையை காப்பாற்ற வேண்டும்.
அமராவதி அணையிலிருந்து, புதிய ஆயக்கட்டு பாசனத்திலுள்ள நிலைப்பயிர்களை காப்பாற்றும் வகையில், பிரதான கால்வாயில் உயிர்த்தண்ணீர் திறந்து விட வேண்டும்.
இக்கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் ஜூலை முதல் வாரத்தில், திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன், குடும்பத்தினருடன் போராட்டம் நடத்தப்படும், ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில், கமிட்டி உறுப்பினர்கள், நாச்சிமுத்து, ஆறுச்சாமி, கணபதி, தர்மராஜ், சிவராஜ், அருளானந்தம், மயில்சாமி, அழகுமுத்து, சுந்தரசாமி, ராமலிங்கம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.