/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ மையத்தடுப்பில் கயிறு; விபத்து தடுக்க யுத்தி மையத்தடுப்பில் கயிறு; விபத்து தடுக்க யுத்தி
மையத்தடுப்பில் கயிறு; விபத்து தடுக்க யுத்தி
மையத்தடுப்பில் கயிறு; விபத்து தடுக்க யுத்தி
மையத்தடுப்பில் கயிறு; விபத்து தடுக்க யுத்தி
ADDED : ஜூன் 30, 2025 12:30 AM

பல்லடம்; 'கரணம் தப்பினால் மரணம்' என்பது பல்லடம், கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலைக்கு மிகவும் பொருந்தும். வாகன ஓட்டிகள் பலர், அசுர வேகத்தில் வாகனங்களை இயக்குகின்றனர்.
ரோட்டில் செல்லும் இதர வாகன ஓட்டிகள், ரோட்டை கடக்க முயற்சிக்கும் வாகனங்கள், பாதசாரிகள் உள்ளிட்டோர், ஒரு நொடி கவனம் சிதறினாலும், பிரச்னை தான். இவ்வகை அச்சத்தை கே.என்.புரம் நால் ரோட்டை கடக்கும் ஒவ்வொரு வாகன ஓட்டியும், பாதசாரியும் அன்றாடம் உணர்ந்து வருகின்றனர்.
அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது:
கே.என்., புரம், லட்சுமி மில், சாமி கவுண்டம்பாளையம் உள்ளிட்ட பகுதிகள் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளன. இங்கிருந்து, தொழில், வேலை, கல்வி, மருத்துவம் ஆகியவற்றுக்காக தினசரி திருப்பூர், கோவை, பல்லடம் பகுதிகளுக்கு சென்று வருகிறோம். இவ்வாறு, வாகனத்தில் செல்லும்போதும், ரோட்டை கடக்கும் போதும், ஒருவித அச்ச உணர்வு ஏற்படுகிறது. கடந்த காலங்களில், எண்ணற்ற விபத்துகள், உயிர் இழப்புகள் இப்பகுதியில் ஏற்பட்டுள்ளன.
சமீப நாட்களாக, கே.என்.புரம் நால் ரோட்டில், அதிக விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. சாலையின் நடுவே முறையான மையத்தடுப்பு இன்றியும், ரோடு மட்டத்துக்கு இணையாக மையத்தடுப்பு கற்கள் இருப்பதாலும், மையத்தடுப்பு வழியாக ரோட்டை கடக்க முயற்சிக்கும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர்.
விபத்தை தடுக்கவே, இப்பகுதியில் கயிறு கட்டி வைத்துள்ளோம். மையத் தடுப்பினை முறைப்படுத்தி அமைக்க தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை, போலீசார், தற்காலிக பாதுகாப்பு ஏற்பாடு செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.