ADDED : ஜன 22, 2024 12:53 AM
அனுப்பர்பாளையம்;திருப்பூர் மாநகராட்சி, இரண்டாவது மண்டலம், 7வது வார்டு குருவாயூரப்பன் நகர் வடக்கு பகுதியில் பல ஆண்டுகளாக சாலை வசதி இல்லை. பொதுமக்கள் கோரிக்கையை தொடர்ந்து, சாலை அமைக்க மாநகராட்சி சார்பில், 60 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
அதனை தொடர்ந்து, தற்போது சாலை அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதனை, மாநகராட்சி, 2ம் மண்டல தலைவர் கோவிந்தராஜ், வார்டு கவுன்சிலர் கவிதா மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.


