/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ 'மொபைல் ஆப்' வாயிலாக சாலை பழுதுக்கு தீர்வு; விழிப்புணர்வு ஏற்படுத்துகிறது நெடுஞ்சாலைத்துறை 'மொபைல் ஆப்' வாயிலாக சாலை பழுதுக்கு தீர்வு; விழிப்புணர்வு ஏற்படுத்துகிறது நெடுஞ்சாலைத்துறை
'மொபைல் ஆப்' வாயிலாக சாலை பழுதுக்கு தீர்வு; விழிப்புணர்வு ஏற்படுத்துகிறது நெடுஞ்சாலைத்துறை
'மொபைல் ஆப்' வாயிலாக சாலை பழுதுக்கு தீர்வு; விழிப்புணர்வு ஏற்படுத்துகிறது நெடுஞ்சாலைத்துறை
'மொபைல் ஆப்' வாயிலாக சாலை பழுதுக்கு தீர்வு; விழிப்புணர்வு ஏற்படுத்துகிறது நெடுஞ்சாலைத்துறை
ADDED : மே 31, 2025 05:14 AM

திருப்பூர்; 'நம்ம சாலை செயலி' வாயிலாக, சாலை பழுது குறித்து புகார் தெரிவிக்க, நெடுஞ்சாலைத்துறை ஊக்குவிப்பு வழங்குகிறது.
தமிழக அரசு, நான்காண்டு பதவிக்காலத்தை நிறைவு செய்துள்ள நிலையில், அடுத்தாண்டு தேர்தல் நடத்தப்பட உள்ளது. அரசின் நான்காண்டு பணிகள், செயல்பாடுகளை மக்களிடம் கொண்டு சென்று சேர்க்கும் வகையில், ஒவ்வொரு துறை சார்ந்த பணிகள் மக்களின் பார்வைக்கு கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகளில் கவனம் செலுத்தப்படுகிறது.
இதில், பல்வேறு இடங்களில் சாலை பழுது என்பது, பெரும் பிரச்னையாக உருவெடுத்திருக்கிறது. உள்ளாட்சி நிர்வாகங்கள், தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில், சில இடங்களில் ஏற்பட்டுள்ள குழிகள், வாகன ஓட்டிகளை திக்குமுக்காட செய்கிறது.
பல நேரங்களில் பெரும் விபத்து நிகழவும், இக்குழிகள் காரணமாகிவிடுகின்றன.இவ்வாறு, சாலையில் உள்ள குழிகள் மற்றும் பழுதுகுறித்து, நெடுஞ்சாலைத் துறைக்கென வடிவமைக்கப்பட்டுள்ள 'நம்ம சாலை செயலி' வாயிலாக, மக்கள், தங்கள் புகார்களை பதிவு செய்யலாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொபைல் போனில் நம்ம சாலை செயலியை பதவிறக்கம் செய்து கொள்வதன் வாயிலாக, நெடுஞ்சாலையில் தென்படும் குழிகள் மற்றும் பழுதை புகைப்படம் எடுத்து, சம்மந்தப்பட்ட இடத்தை குறிப்பிட்டு, பதிவேற்றம் செய்வதன் வாயிலாக, பழுது நீக்கம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பர் என, நெடுஞ்சாலைத்துறை சார்பில், மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
சாலைகளை தெரிஞ்சுக்கணும்!
இந்த செயலியில் மாநில நெடுஞ்சாலைத்துறையால் பராமரிக்கப்படும் சாலைகளில் உள்ள பள்ளங்கள் மற்றும் பழுதுகள் தொடர்பான புகார்களுக்கு மட்டுமே தீர்வு காண வழிவகை செய்யப்பட்டுள்ளது. மாறாக, உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் பிற அமைப்பினரால் பராமரிக்கப்படும் சாலை பிரச்னைகளுக்கு தீர்வு பெற இயலாது.
எனவே, சாலை பழுது தொடர்பாக புகார் பதிவு செய்யும் மக்கள், அந்த சாலை எந்த துறையின் கட்டுப்பாட்டில் வருகிறது என்பதை அறிந்து வைத்திருப்பது அவசியம்.