/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ கம்பு மதிப்பு கூட்டல் பயிற்சி; விவசாயிகள் எதிர்பார்ப்பு கம்பு மதிப்பு கூட்டல் பயிற்சி; விவசாயிகள் எதிர்பார்ப்பு
கம்பு மதிப்பு கூட்டல் பயிற்சி; விவசாயிகள் எதிர்பார்ப்பு
கம்பு மதிப்பு கூட்டல் பயிற்சி; விவசாயிகள் எதிர்பார்ப்பு
கம்பு மதிப்பு கூட்டல் பயிற்சி; விவசாயிகள் எதிர்பார்ப்பு
ADDED : ஜூன் 12, 2025 09:54 PM
உடுமலை; கம்பு உட்பட சிறுதானியங்களை மதிப்பு கூட்டி விற்பனை செய்வது குறித்து, வேளாண்துறை வாயிலாக பயிற்சியளிக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.
உடுமலை சுற்றுப்பகுதிகளில், கிணற்றுப்பாசனத்துக்கும், மானாவாரியாகவும், சிறுதானியங்கள் பரவலாக சாகுபடி செய்யப்படுகிறது. இதில், கம்பு, வறட்சியை தாங்கி வளர்வதால், அனைத்து சீசன்களிலும் பயிராகிறது.
கம்பு வறட்சியைத் தாங்கி வளரக்கூடிய குறுகிய கால உணவு தானியப் பயிராகும். இறவை பாசனத்துக்கும் சாகுபடி செய்யப்படுகிறது. ஏக்கருக்கு, 400--600 கிலோ விளைச்சல் கிடைக்கிறது.
இந்நிலையில், அறுவடை சீசனில், போதிய விலை கிடைக்காமல், கம்பு சாகுபடி செய்யும் விவசாயிகள் பாதிக்கின்றனர்.
இப்பிரச்னைக்கு தீர்வாக கம்பு உட்பட சிறு தானியங்களில் இருந்து, மதிப்பு கூட்டும் தொழில்நுட்பங்கள் குறித்து வேளாண்துறை வாயிலாக, விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
கம்பு தானியத்தில், புரதம் உட்பட பல்வேறு சத்துகளை உள்ளடக்கியதாகும். எனவே, கம்பு பிஸ்கட் பல்வேறு மதிப்பு கூட்டு பொருட்கள் தயாரித்து விற்பனை செய்கின்றனர்.
இத்தகைய பயிற்சிகளை விவசாயிகளுக்கு அளித்தால், கம்புக்கு நிலையான விலை கிடைக்கும். இது குறித்து வேளாண்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உடுமலை பகுதி விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.