ADDED : ஜூன் 12, 2025 09:54 PM
- நமது நிருபர் -
ஆண்டுதோறும் ஜூன் 3, சுய உதவி குழுக்கள் தினமாக கொண்டாடப்பட்டுவருகிறது.
திருப்பூர் மாவட்டத்தில், கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் வங்கி கடன் வழங்கும் விழாவை காணொலி காட்சி வாயிலாக, துணை முதல்வர் துவக்கிவைத்தார்.
டி.ஆர்.ஓ., ஜெய்பீம், மகளிர் சுய உதவி குழுவினருக்கு, வங்கி கடன் வழங்கினார். மொத்தம் 781 மகளிர் குழுக்களுக்கு, 72 கோடி ரூபாய் வங்கி கடன் வழங்கப்பட்டது. ஊரக வளர்சி முகமை திட்ட இயக்குனர் மலர்விழி, மகளிர் திட்ட இயக்குனர் சாம்சாந்தகுமார், மாவட்ட முன்னோடி வங்கி (கனரா) துர்கபிரசாத், உதவி திட்ட அலுவலர் கவுதமன் உள்பட அதிகாரிகள், மகளிர் சுய உதவி குழுவினர் பங்கேற்றனர்.