ADDED : ஜன 13, 2024 02:10 AM
உடுமலை;உடுமலை ராஜேந்திரோ ரோடு நகரின் பிரதான ரோடாக உள்ளது.
இந்த ரோட்டில் நகராட்சி சந்தை, வணிக கடைகள், அரசு மேல்நிலைப்பள்ளி, ரயில்வே ஸ்டேஷன் போன்றவை அமைந்துள்ளது. ரோட்டின் இருபுறங்களிலும், தள்ளு வண்டிகடைகளும், கடைகளின் ஆக்கிரமிப்புகளும் காணப்படுவதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே இந்த ஆக்கிரமிப்புகளை நகராட்சியினரும், போலீசாரும் இணைந்து அகற்ற வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.