ADDED : செப் 22, 2025 10:55 PM
உடுமலை,;உடுமலை கொழுமம் ரோடு ரயில்வே கேட் பகுதியில், மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உடுமலை காந்திநகர் அருகே, தேசிய நெடுஞ்சாலையிலிருந்து பிரிந்து குமரலிங்கம் செல்லும் ரோடு, 18.80 கி.மீ., தொலைவுடையது.
உடுமலையிலிருந்து பழநிக்கு செல்ல மாற்றுப்பாதையாக இந்த ரோடு உள்ளது. சுற்றுலா வாகனங்கள் மட்டுமல்லாது, பல்வேறு பகுதிகளிலிருந்து பழநிக்கு இயக்கப்படும் தனியார் பஸ்களும் இந்த ரோட்டில் சென்று வருகின்றன.
பள்ளிகள் மற்றும் பல்வேறு தொழிற்சாலைகள் இந்த வழித்தடத்தில் அமைந்துள்ளதால், இந்த ரோட்டில் நெரிசல் அதிகளவு இருக்கும்.
இந்த ரோட்டில், நகர எல்லையில், அகல ரயில்பாதை அமைந்துள்ளது. இந்த 'கேட்' அடிக்கடி மூடப்படும் போது, வாகனங்கள், தேசிய நெடுஞ்சாலை வரை அணிவகுத்து நிற்கின்றன. இப்பகுதியில், மேம்பாலம் அமைக்க வேண்டும் என வாகன ஓட்டுநர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.