/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ விருது பெற்ற பள்ளி ஆசிரியருக்கு பாராட்டு விருது பெற்ற பள்ளி ஆசிரியருக்கு பாராட்டு
விருது பெற்ற பள்ளி ஆசிரியருக்கு பாராட்டு
விருது பெற்ற பள்ளி ஆசிரியருக்கு பாராட்டு
விருது பெற்ற பள்ளி ஆசிரியருக்கு பாராட்டு
ADDED : செப் 22, 2025 10:54 PM
உடுமலை,; உடுமலையில், மாநில நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியருக்கு, முன்னாள் மாணவர் சங்கத்தின் சார்பில் பாராட்டு விழா நடந்தது.
உடுமலை ஒன்றியம் ஆண்டியகவுண்டனுார் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமையாசிரியர் தங்கவேல் என்பவருக்கு மாநில நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டது.
விருது பெற்ற ஆசிரியருக்கு திருமூர்த்திநகர் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில், 1987-89 வரை படித்த முன்னாள் மாணவர் சங்கத்தினர் பாராட்டு விழா நடத்தினர்.
முன்னாள் மாணவர் சங்கத்தை சேர்ந்த நாகராஜன் வரவேற்றார். சங்க தலைவர் பூபதி தலைமை வகித்தார். வட்டார கல்வி அலுவலர் சின்னப்பராஜ் முன்னிலை வகித்தார்.
சங்கத்தை சேர்ந்த துரைசாமி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். தலைமையாசிரியர் லட்சுணசாமி நன்றி தெரிவித்தார்.