/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ நிழற்கூரை இல்லாமல் பொதுமக்கள் அவதி நிழற்கூரை இல்லாமல் பொதுமக்கள் அவதி
நிழற்கூரை இல்லாமல் பொதுமக்கள் அவதி
நிழற்கூரை இல்லாமல் பொதுமக்கள் அவதி
நிழற்கூரை இல்லாமல் பொதுமக்கள் அவதி
ADDED : ஜூன் 11, 2025 07:46 PM
உடுமலை; உடுமலை-தளி ரோட்டில் மேம்பாலம் தாண்டியதும், ஒன்றிய அலுவலக பஸ் ஸ்டாப் உள்ளது. உடுமலை ஒன்றிய அலுவலகம், இ.எஸ்.ஐ., மருத்துவமனை அப்பகுதியில் அமைந்துள்ளது. இதனால், நாள்தோறும் நுாற்றுக்கணக்கான மக்கள் அங்கு வந்து செல்கின்றனர்.
அப்பகுதியில் நிழற்கூரை வசதியில்லை. மழை மற்றும் வெயில் காலங்களில் மக்கள் மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனர். ஒன்றிய அலுவலகத்துக்கு தற்போது புது கட்டடம் கட்டும் பணி நடக்கிறது; இதையொட்டி, பஸ் ஸ்டாப் நிழற்கூரை கட்டவும் மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.