/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ உள்ளூர் வாகனங்களுக்கு விலக்கு பொதுமக்கள் வேண்டுகோள் உள்ளூர் வாகனங்களுக்கு விலக்கு பொதுமக்கள் வேண்டுகோள்
உள்ளூர் வாகனங்களுக்கு விலக்கு பொதுமக்கள் வேண்டுகோள்
உள்ளூர் வாகனங்களுக்கு விலக்கு பொதுமக்கள் வேண்டுகோள்
உள்ளூர் வாகனங்களுக்கு விலக்கு பொதுமக்கள் வேண்டுகோள்
ADDED : மே 24, 2025 05:59 AM

பொங்கலுார், : மாதப்பூர் டோல்கோட்டில் உள்ளூர் வாகனங்களுக்கு கட்டண விலக்கு அளிக்க வேண்டுமென, வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை சமீபத்தில் விரிவாக்கம் செய்யப்பட்டது. தற்போது பொங்கலுார் - மாதப்பூரில் டோல்கேட் அமைக்கப்பட்டு வருகிறது. விரைவில் டோல்கேட் கட்டண வசூல் துவங்கும். பொங்கலுார் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பல்லடம், திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு நாள்தோறும் சென்று வருவர். சிலரது வீடு ஒருபுறமும், தோட்டம் அல்லது தொழில் நிறுவனம் ஆகியவை டோல்கேட்டுக்கு மறுபுறமும் இருக்கும் நிலை கூட உள்ளது.
எனவே, உள்ளூர் மக்களால் அன்றாடம் டோல்கேட் கட்டணம் செலுத்துவது மிகவும் சிரமம் என்பதால், பொங்கலுாரை சுற்றியுள்ள கிராமங்களுக்கு டோல்கேட் கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வேண்டு கோள் விடுத்துள்ளனர்.


