/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ குடிநீர் தட்டுப்பாடு அலுவலரிடம் மனு குடிநீர் தட்டுப்பாடு அலுவலரிடம் மனு
குடிநீர் தட்டுப்பாடு அலுவலரிடம் மனு
குடிநீர் தட்டுப்பாடு அலுவலரிடம் மனு
குடிநீர் தட்டுப்பாடு அலுவலரிடம் மனு
ADDED : மே 24, 2025 05:58 AM
அவிநாசி : அவிநாசி வட்டம், பழங்கரை ஊராட்சியில் பவானி ஆற்று நீரை குடிநீர் ஆதாரமாகக் கொண்டு, 708 வழியோர கிராமங்களுக்கான கூட்டு குடிநீர் திட்டம் என்ற திட்டத்தின் கீழ் பெரியாயிபாளையத்தில் ஒரு நீரேற்று நிலையம் மற்றும் பச்சம்பாளையத்தில் ஒரு நீரேற்று நிலையம் மூலம் மேல்நிலைத் தொட்டி கட்டப்பட்டு குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது.
இதில், பச்சாம்பாளையத்தில் இருந்து குளத்துப்பாளையம்,தேவம்பாளையம், அவிநாசிலிங்கம் பாளையம் ஆகிய கிராமங்களில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்கு குடிநீர் குழாய் அமைக்கப்பட்டு தற்போது தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது. ஆனால், அதில் அவிநாசிலிங்கம் பாளையத்திற்கு முறையாக வருவதில்லை. 10 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே சப்ளை வருகின்றது.
இதனால் அந்தப் பகுதி முழுவதும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால், பச்சம்பாளையம் நீரேற்று பகுதியில் இருந்து நான்கு கிராமங்களுக்கும் சமமாக குடிநீர் வினியோகம் மேல்நிலைத் தொட்டி மூலம் நடைபெற வேண்டும். குளத்துப்பாளையம், தேவம்பாளையம், நல்லி கவுண்டம்பாளையம், அவிநாசிலிங்கம் பாளையம் ஆகிய கிராம பகுதிகளுக்கும் சீரான குடிநீர் வினியோகம் செய்யவும், தெரு குழாய் வாயிலாக வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து, இ.கம்யூ., கட்சி சார்பில் அவிநாசி ஊராட்சி ஒன்றிய துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஆனந்திடம் மனு அளிக்கப்பட்டது.


