/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ பி.டி.ஓ., மீண்டும் மாற்றம் பல்லடத்தில் சலசலப்பு பி.டி.ஓ., மீண்டும் மாற்றம் பல்லடத்தில் சலசலப்பு
பி.டி.ஓ., மீண்டும் மாற்றம் பல்லடத்தில் சலசலப்பு
பி.டி.ஓ., மீண்டும் மாற்றம் பல்லடத்தில் சலசலப்பு
பி.டி.ஓ., மீண்டும் மாற்றம் பல்லடத்தில் சலசலப்பு
ADDED : செப் 25, 2025 12:24 AM
பல்லடம்:கடந்த ஒரு மாதத்துக்கு முன் பல்லடம் பி.டி.ஓ., மாற்றப்பட்ட நிலையில், கலெக்டர் உத்தரவின்படி, தற்போது, மீண்டும் பி.டி.ஓ., மாற்றப்பட்டுள்ளது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
பல்லடம் பி.டி.ஓ.,வாக இருந்த கனகராஜ், கடந்த ஒரு மாதத்துக்கு முன், திருப்பூருக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். திருப்பூர் பி.டி.ஓ., வேலுசாமி, பல்லடத்துக்கு மாற்றப்பட்டார். கடந்த மாதம், 22ம் தேதி, இந்த பணியிட மாற்றம் செய்து கலெக்டர் உத்தரவிட்டிருந்த நிலையில், தற்போது, பல்லடத்துக்கு பி.டி.ஓ., கனகராஜ் மாற்றப்பட்டு, வேலுசாமி மீண்டும் திருப்பூருக்கு மாற்றப்பட்டார்.
பணியிட மாற்றம் செய்யப்பட்ட பி.டி.ஓ.க்கள், ஒரே மாதத்தில், மீண்டும் பழைய இடங்களுக்கே பணி மாற்றம் செய்யப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக, பி.டி.ஓ., கனகராஜ் கணபதிபாளையம், வடுகபாளையம் புதுார் ஊராட்சி செயலர்களை பணியிட மாற்றம் செய்திருந்த நிலையில், பி.டி.ஓ., வேலுசாமி பொறுப்பேற்ற அன்றே, மேற்கூறிய ஊராட்சி செயலர்களை மீண்டும் பழைய இடத்துக்கே மாற்றி உத்தரவு பிறப்பித்தார்.
இது, சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், அந்த உத்தரவை உடனடியாக ரத்து செய்தார். அதேபோல், தற்போது, பி.டி.ஓ., பணியிட மாற்றங்களும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளன.
உத்தரவு பிறப்பிப்பதும், உடனடியாக அதை ரத்து செய்வதும், பல்லடத்தில் வாடிக்கையாகிவிட்டது என, பொதுமக்கள் கூறுகின்றனர்.