Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ நிழற்குடை இல்லாத அவலம்; சேவூரில் மக்களுக்கு சிரமம்

நிழற்குடை இல்லாத அவலம்; சேவூரில் மக்களுக்கு சிரமம்

நிழற்குடை இல்லாத அவலம்; சேவூரில் மக்களுக்கு சிரமம்

நிழற்குடை இல்லாத அவலம்; சேவூரில் மக்களுக்கு சிரமம்

ADDED : செப் 25, 2025 12:24 AM


Google News
Latest Tamil News
அவிநாசி: சேவூர் - கைகாட்டி ரவுண்டானாவில் நிழற்குடை அமைக்க பொதுமக்கள் சார்பில், மக்கள் சேவகன் அறக்கட்டளையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சேவூர் ரவுண்டானாவிலிருந்து புளியம்பட்டி, சத்தி, மைசூரு மற்றும் நம்பியூர் வழியாக கோபி ஆகிய பகுதிகளுக்கு செல்லும் பிரதான மையமாக கைகாட்டி உள்ளது.

சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து ஏராளமான விவசாயிகள், வியாபாரிகள் வாரந்தோறும் நிலக்கடலை மற்றும் வாழைத்தார் ஏலம் ஆகியவற்றுக்கு சேவூருக்கு வந்து செல்கின்றனர். இவர்கள் தவிர, அவிநாசி, கோவை, திருப்பூரிலுள்ள கல்வி நிறுவனங்களுக்கு செல்லும் மாணவ, மாணவியரும், இந்த இடத்தில் தான் கூடுவர்.

திருப்பூரை மையமாகக் கொண்டு அதன் சார்ந்த ஜாப் ஒர்க் நிறுவனங்கள் ஏராளம் உள்ளது. இவற்றுக்கெல்லாம் பிரதான பஸ் ஸ்டாப்பாக சேவூர் ரவுண்டானா அமைந்துள்ளது. இவ்வளவு பரபரப்பு நிறைந்த கைகாட்டியில், நிழற்குடை இல்லாததால், பொதுமக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.

இதற்காக பலமுறை சேவூர் ஊராட்சி நிர்வாகம், நீலகிரி எம்.பி. ராஜா, அவிநாசி எம்.எல்.ஏ. ஆகியோரிடம் பொதுமக்கள் சார்பாக மக்கள் சேவகன் அறக்கட்டளையினர் நிழற்குடை அமைக்க மனு அளித்திருந்தனர்.

கடந்த 2024 நவ., 30ம் தேதி, எம்.பி., ராஜா வாயிலாக, உள்ளூர் வளர்ச்சி திட்டம் 2023--24ம் நிதியாண்டில் நிழற்குடை அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது.

ஆனால், ஓராண்டாகியும் நடவடிக்கை எடுக்காததால் பயணிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே, மக்கள் பயன்பாட்டுக்காக, சேவூர் ரவுண்டானாவில், உடனடியாக நிழற்குடை அமைக்க வேண்டுமென, மக்கள் சேவகன் அறக்கட்டளையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us