/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/மாநகராட்சி சார்பில் ரூ.50 லட்சம் வழங்கல்மாநகராட்சி சார்பில் ரூ.50 லட்சம் வழங்கல்
மாநகராட்சி சார்பில் ரூ.50 லட்சம் வழங்கல்
மாநகராட்சி சார்பில் ரூ.50 லட்சம் வழங்கல்
மாநகராட்சி சார்பில் ரூ.50 லட்சம் வழங்கல்
ADDED : ஜன 05, 2024 01:31 AM
திருப்பூர்;சமீபத்தில், சென்னை, நெல்லை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் புயல் மற்றும் மழை காரணமாக பெரும் பாதிப்பு ஏற்பட்டது. இதனால், பல்வேறு பகுதிகளிலிருந்தும் நிவாரணப் பொருட்கள், முதல்வர் பொது நிவாரண நிதிக்கு தொகையும் வழங்கப்பட்டது.அவ்வகையில் திருப்பூர் மாநகராட்சி சார்பில், மேயர், துணை மேயர் மற்றும் கவுன்சிலர்களின் ஒரு மாத சம்பளம், கமிஷனர் உள்ளிட்ட அனைத்து அலுவலர்களின் ஒரு நாள் சம்பளம், மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள், சாய ஆலை உரிமையாளர் சங்கம், உள்நாட்டு பனியன் உற்பத்தியாளர் சங்கம் மற்றும் பல்வேறு தன்னார்வ அமைப்புகள் சார்பிலும், நிதி வழங்கப்பட்டது.
அவ்வகையில், மொத்தம் 50 லட்சம் ரூபாய் தொகைக்கான காசோலைகளை மேயர் தினேஷ்குமார், முதல்வர் ஸ்டாலினிடம் நேற்று வழங்கினார்.