/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ மாணவியருக்கு தேர்வு உபகரணங்கள் வழங்கல் மாணவியருக்கு தேர்வு உபகரணங்கள் வழங்கல்
மாணவியருக்கு தேர்வு உபகரணங்கள் வழங்கல்
மாணவியருக்கு தேர்வு உபகரணங்கள் வழங்கல்
மாணவியருக்கு தேர்வு உபகரணங்கள் வழங்கல்
ADDED : மார் 28, 2025 03:27 AM

பல்லடம்: பல்லடம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் அரசு பள்ளி மாணவியருக்கு, தேர்வுக்கான உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
பல்லடம் ஈகை அறக்கட்டளை சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு, பள்ளி தலைமை ஆசிரியை சாந்தி தலைமை வகித்தார். அறக்கட்டளை சேவகர் சீனிவாசன், ராமபிரபு, நாராயணன், கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முன்னதாக, பொதுத்தேர்வு எழுதும் மாணவியருக்கு, பேனா, பென்சில், ஸ்கேல், ரப்பர், ஷார்ப்னர் உள்ளிட்ட உபகரணங்கள் இலவசமாக வழங்கப்பட்டன. பொதுத்தேர்வில் வெற்றி பெற ஈகை அறக்கட்டளை சார்பில் மாணவியருக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.


