/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/உதவி மேலாளரை கண்டித்து ஆர்ப்பாட்டம்உதவி மேலாளரை கண்டித்து ஆர்ப்பாட்டம்
உதவி மேலாளரை கண்டித்து ஆர்ப்பாட்டம்
உதவி மேலாளரை கண்டித்து ஆர்ப்பாட்டம்
உதவி மேலாளரை கண்டித்து ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூன் 09, 2025 11:35 PM
தாராபுரம்; திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அரசு போக்குவரத்து டிப்போவை சேர்ந்தவர் டிரைவர் கணேசன், 50. இவரை மதுரை ஆரப்பாளையம் பஸ் ஸ்டாண்டில் உதவி மேலாளர் மாரிமுத்து, தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
உதவி மேலாளர் மாரிமுத்துவை கண்டித்து, தாராபுரம் டிப்போ முன் போக்குவரத்து ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சி.ஐ.டி.யு., மாவட்ட குழு உறுப்பினர் பொன்னுசாமி, டி.டி.எஸ்.எப்., மண்டல தலைவர் இன்பசேகர், எல்.பி.எப்., ஷாஜகான் உட்பட பலர் பங்கேற்றனர்.
தாக்கிய உதவி மேலாளர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். பணி பாதுகாப்பு வழங்க வேண்டும் என கோஷம் எழுப்பினர்.