/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ தடகள விளையாட்டில் வெண்கலம்; அவிநாசி மாணவி அசத்தல் தடகள விளையாட்டில் வெண்கலம்; அவிநாசி மாணவி அசத்தல்
தடகள விளையாட்டில் வெண்கலம்; அவிநாசி மாணவி அசத்தல்
தடகள விளையாட்டில் வெண்கலம்; அவிநாசி மாணவி அசத்தல்
தடகள விளையாட்டில் வெண்கலம்; அவிநாசி மாணவி அசத்தல்
ADDED : ஜூன் 09, 2025 11:36 PM
அவிநாசி; கோவையில் நடைபெற்ற தடகள விளையாட்டில் ஈட்டி எறிதல் போட்டியில், அவிநாசி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி, வெண்கல பதக்கம் வென்றார்.
தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில் கோவை நேரு உள் விளையாட்டரங்கில், தமிழ்நாடு மாநில 'நான் மெடலிஸ்ட்' தடகள சாம்பியன்ஷிப் போட்டி, கடந்த 7 மற்றும் 8ம் தேதிகளில் நடைபெற்றது.
அதில் அவிநாசி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, 11ம் வகுப்பு மாணவி சபரீஷா, ஈட்டி எறிதல் போட்டியில் பங்கேற்று, 24.86 மீ., எறிந்து மூன்றாம் இடம் பிடித்து, வெண்கல பதக்கம் வென்றார்.
மாணவியை, தலைமையாசிரியர், உடற்பயிற்சி ஆசிரியர் மற்றும் மாணவிகள் வாழ்த்தினர்.