Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ தனியார் மதுக்கூடங்கள் சத்தமின்றி அதிகரிப்பு

தனியார் மதுக்கூடங்கள் சத்தமின்றி அதிகரிப்பு

தனியார் மதுக்கூடங்கள் சத்தமின்றி அதிகரிப்பு

தனியார் மதுக்கூடங்கள் சத்தமின்றி அதிகரிப்பு

ADDED : மார் 21, 2025 02:12 AM


Google News
பல்லடம்: -பல்லடம் வட்டாரத்தில், தனியார் மதுபான பார்'களின் எண்ணிக்கை சத்தமின்றி அதிகரித்து வருகின்றது.

தமிழகத்தில், ஆட்சிப் பொறுப்பேற்றதும் மதுக்கடைகள் படிப்படியாக குறைக்கப்படும் என, முன்னாள் முதல்வர் ஜெ., ஆட்சிக்காலம் முதல் கூறப்பட்டு வருகிறது. தற்போதைய தி.மு.க., அரசும், தேர்தலுக்கு முன்பாக இதே வாக்குறுதியைத்தான் அளித்தது. தேர்தல் வாக்குறுதிப்படி, டாஸ்மாக் மதுக்கடைகள் குறைக்கப்பட்டு வந்த போதும், மற்றொருபுறம், தனியார் மதுபான பார்'களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது.

பல்லடம் வட்டாரத்தில், பொதுமக்களின் கடுமையான எதிர்ப்பைத் தொடர்ந்து, சில டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்பட்ட நிலையில், தற்போது, 20க்கும் மேற்பட்ட மதுக்கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதேபோல், கடந்த காலங்களில், 6 தனியார் மதுபான பார் இருந்த நிலையில், சத்தமின்றி இவற்றின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்தது. தற்போது, இரு மடங்காக அதிகரித்து, 12 தனியார் 'பார்' செயல்பட்டு வருகின்றன. இதனால், மது விற்பனையை கட்டுப்படுத்தும் நோக்கில், டாஸ்மாக் மது கடைகள் மூடப்பட்ட போதும், மற்றொருபுறம், தனியார் 'பார்' வாயிலாக, இந்த விற்பனையை ஈடு செய்ய டாஸ்மாக் நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாகவே பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us