/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ பன்னுக்குள் 'பல்' பேக்கரிக்கு அபராதம் பன்னுக்குள் 'பல்' பேக்கரிக்கு அபராதம்
பன்னுக்குள் 'பல்' பேக்கரிக்கு அபராதம்
பன்னுக்குள் 'பல்' பேக்கரிக்கு அபராதம்
பன்னுக்குள் 'பல்' பேக்கரிக்கு அபராதம்
ADDED : மார் 21, 2025 02:12 AM
திருப்பூர்: திருப்பூர், காங்கயம் சாலையில் உள்ள பேக்கரியில், விற்பனை செய்யப்பட்ட பன்னுக்குள் பல் இருந்த நிலையில், உணவு பாதுகாப்பு அலுவலர்கள் அபராதம் விதித்தனர்.
திருப்பூர், காங்கயம் சாலையில் ஜே.கே., கேக் ஷாப் உள்ளது. கடந்த, 18ம் தேதி பெண் ஒருவர், தனது குழந்தைகளுக்கு பன் வாங்கி கொடுத்து, தானும் சாப்பிட்டுள்ளார். அப்போது, பன்னுக்குள் பல் இருப்பது தெரிந்து அதிர்ச்சியடைந்தார். அவர் இது குறித்து, பேக்கரி உரிமையாளரிடம் முறையிட்ட போது, அவர் உரிய விளக்கம் தரவில்லை.உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்களுக்கு, மொபைல் போனில் அந்த பெண் புகார் அளித்த நிலையில், உணவு பாதுகாப்பு அலுவலர் ஆறுச்சாமி கடையில் ஆய்வு மேற்கொண்டார்.
பேக்கரியில் இருந்த உணவு தயாரிப்புக் கூடம் சுகாதாரமற்ற நிலையில் இருந்தது தெரிய வர, 3,000 ரூபாய் அபராதம் விதித்து, தற்காலிகமாக 'சீல்' வைத்தார். உணவு பாதுகாப்பு துறை விதிமுறைப்படி உணவுக்கூடத்தை ஒழுங்குப்படுத்த வேண்டும் என அறிவுறுத்திய அவர், ஆய்வுக்கு பிறகே, கடை திறக்க அனுமதிக்கப்படும் என, கூறி சென்றார்.