/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ 'பாப் அப் கார்னிவல்' சீசன் - 2 துவங்கியது 'பாப் அப் கார்னிவல்' சீசன் - 2 துவங்கியது
'பாப் அப் கார்னிவல்' சீசன் - 2 துவங்கியது
'பாப் அப் கார்னிவல்' சீசன் - 2 துவங்கியது
'பாப் அப் கார்னிவல்' சீசன் - 2 துவங்கியது
ADDED : செப் 20, 2025 11:44 PM

திருப்பூர் : திருப்பூர், காங்கயம் ரோடு மணி மகாலில், பாப் அப் கார்னிவல் சீச-ன்--2 நேற்று துவங்கியது.
திருப்பூரில் ஹலோமெலோ என்ற தலைப்பில், பாப் அப் கார்னிவல் சீசன்-2 கண்காட்சி மற்றும் விற்பனை துவக்க விழா நேற்று நடைபெற்றது. காங்கயம் ரோடு மணி மகாலில் இதனை பொறியாளர் சண்முகராஜ் திறந்து வைத்தார்.
கே.எம். நிட்வேர் சேர்மன் மகேஸ்வரி குத்து விளக்கேற்றினார். கண்ணன் ஸ்பின்னர்ஸ் கண்ணுசாமி, ஆஞ்சநேயா ஏஜன்சி சிவகுமார், மணி மஹால் நிர்வாக இயக்குநர் பொன்னுசாமி, முன்னாள் தலைமையாசிரியர் பழனிசாமி முன்னிலை வகித்தனர்.
ஹலோ மெலோ ஹரி ரிதன்யா, நித்யாந்தி சண்முகராஜ், தி ஈவென்ட் டுடே பூமிகா ஆகியோர் வரவேற்றனர். கண்காட்சியில், பல்வேறு ஷாப்பிங் ஸ்டால்கள், வித்தியாசமான பொருட்கள், புட்கோர்ட், பொழுது போக்கு அம்சங்களும் இடம் பெற்றுள்ளது.
அனுமதி இலவசம். இந்த கார்னிவல் இன்றுடன் (21ம் தேதி) நிறைவடைகிறது.