/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ செக்யூரிட்டியை தேடி உ.பி., சென்ற போலீஸ் செக்யூரிட்டியை தேடி உ.பி., சென்ற போலீஸ்
செக்யூரிட்டியை தேடி உ.பி., சென்ற போலீஸ்
செக்யூரிட்டியை தேடி உ.பி., சென்ற போலீஸ்
செக்யூரிட்டியை தேடி உ.பி., சென்ற போலீஸ்
ADDED : செப் 14, 2025 12:06 AM
திருப்பூர்:திருப்பூரில் போலி துப்பாக்கி உரிமம் பெற்று துப்பாக்கி வைத்திருந்து தலைமறைவான செக்யூரிட்டியை உத்தரபிரதேசம் மாநிலத்தில் தனிப்படையினர் தேடி வருகின்றனர்.
பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் ஸ்ரீ உமேஷ் சிங், 55. திருப்பூர் எஸ்.பெரியாயிபாளையத்தில் தங்கி, பல்லடம் ரோட்டில் உள்ள தனியார் வங்கியில் துப்பாக்கி ஏந்திய செக்யூரிட்டியாக வேலை செய்து வந்தார். அவர் வைத்திருக்கும் துப்பாக்கியின் உரிமம் போலியானது என திருப்பூர் தெற்கு போலீசாருக்கு தெரிய வந்தது. இதுதொடர்பாக, வங்கியில் பணியில் இருந்த உமேஷ் சிங்கிடம் விசாரித்தனர். துப்பாக்கிக்கான உரிம ஆவணத்தை கொடுத்தார். அதை பெற்று போலீசார் விசாரித்த போது, போலி என தெரிய வந்தது. தொடர்ந்து, உமேஷ் சிங் தலைமறைவானார்.
அவர் உத்தரபிரதேசத்துக்கு தப்பி சென்றது தெரிந்தது.
தொடர்ந்து அவரை தேடி தனிப்படை போலீசார் உ.பி., சென்று முகாமிட்டு தேடி வருகின்றனர். அவரை கைது செய்தால்,போலி உரிமம் தயார் செய்து கொடுத்தது யார் என, தெரிய வரும் என்று போலீசார் தெரிவித்தனர்.