/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ சிறுபாசனம், நீர் நிலை கணக்கெடுப்பு இம்மாத இறுதிக்குள் முடிக்க இலக்கு சிறுபாசனம், நீர் நிலை கணக்கெடுப்பு இம்மாத இறுதிக்குள் முடிக்க இலக்கு
சிறுபாசனம், நீர் நிலை கணக்கெடுப்பு இம்மாத இறுதிக்குள் முடிக்க இலக்கு
சிறுபாசனம், நீர் நிலை கணக்கெடுப்பு இம்மாத இறுதிக்குள் முடிக்க இலக்கு
சிறுபாசனம், நீர் நிலை கணக்கெடுப்பு இம்மாத இறுதிக்குள் முடிக்க இலக்கு
ADDED : செப் 13, 2025 11:20 PM
திருப்பூர்:நாடு முழுவதும் மத்திய அரசு நீர் நிலைகள், நீர் ஆதாரங்கள் குறித்த கணக்கெடுப்பை மேற்கொண்டு வருகிறது. அவ்வகையில், 2023 - 24 ஆண்டில் ஏழாவது சிறுபாசனக் கணக்கெடுப்பு மற்றும் 2வது நீர் நிலைகள் கணக்கெடுப்பு நடத்த முடிவு செய்யப்பட்டது.
அதன்படி கணக்கெடுப்பு பணிகள் கடந்த ஆக., மாதம் முதல் அனைத்து கிராமங்கள் மற்றும் நகரப் பகுதியில் உள்ள திறந்த வெளி, ஆழ்குழாய் கிணறுகள், குளம், குட்டை உள்ளிட்ட நீர் நிலைகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கப்படுகிறது.
இந்த விவரங்கள் அனைத்து மத்திய நீர் வள ஆதாரத்துறை அமைச்சகம் மூலம் தொகுக்கப்படும்.இப்பணி ஊராட்சி பகுதிகளில், உரிய கிராம நிர்வாக அலுவலர்கள் மூலமும், நகரப் பகுதியில் உள்ளாட்சி அமைப்பு பணியாளர்கள் மூலமும் மேற்கொள்ளப்படுகிறது.கணக்கெடுப்பு பணியில் விவசாயிகள், பொதுமக்கள் தாங்கள் பயன்படுத்தும் நீர்ப்பாசனம், குடிநீர் ஆதாரம் மற்றும் பயன்பாடு குறித்து தெரிவிக்க வேண்டும்.
இந்த திட்டத்தில் ஊராட்சி பகுதிகளில் மட்டும் பொதுமக்களிடம் நேரடியாக குடிநீர் ஆதாரம் குறித்த விவரங்கள் பெறப்படுகிறது. நகரப் பகுதியில் நீர் நிலை குறித்த கணக்கெடுப்பு மட்டும் போதும் என்று தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இப்பணி தற்போது மும்முரமாக நடந்து வருகிறது.
மாவட்ட புள்ளியியல் துறை உதவி இயக்குநர் விஜய லட்சுமி கூறியதாவது :
இக்கணக்கெடுப்பு பணி மாவட்டம் முழுவதும் மும்முரமாக நடந்து வருகிறது. அண்மையில் கலெக்டர் தலைமையில் இக்கணக்கெடுப்பு பணி நிலவரம் குறித்து ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது.
இம்மாத இறுதிக்குள் இப்பணியை முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே, இப்பணி தீவிரமாக நடக்கிறது.இவ்வாறு அவர் கூறினார்.