/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ பிளஸ் 2 தேர்வு முடிந்தது... பிரியாவிடை அளித்த மாணவியர் பிளஸ் 2 தேர்வு முடிந்தது... பிரியாவிடை அளித்த மாணவியர்
பிளஸ் 2 தேர்வு முடிந்தது... பிரியாவிடை அளித்த மாணவியர்
பிளஸ் 2 தேர்வு முடிந்தது... பிரியாவிடை அளித்த மாணவியர்
பிளஸ் 2 தேர்வு முடிந்தது... பிரியாவிடை அளித்த மாணவியர்
ADDED : மார் 26, 2025 12:29 AM

திருப்பூர்; பொதுவாக பள்ளி இறுதிநாளில், ஒருவர் மீது ஒருவர் 'இங்க்' அடிப்பது போன்ற செல்லமான சேட்டைகளில் ஈடுபடுவது வழக்கம். ஆனால், பெரும்பாலான அரசுப்பள்ளிகளில் மாணவ, மாணவியரின் இந்த கொண்டாட்டங்களுக்கு பள்ளி ஆசிரியர்கள் தடை விதித்தனர்.
திருப்பூர் ஜெய்வாபாய் பள்ளி ஆசிரியர்கள் கூறியதாவது:
பெரும்பாலான மாணவியர், இங்க் பாட்டில், மொபைல் போன் போன்றவற்றை தங்கள் பையில் வைத்து எடுத்து வந்திருந்தனர். தேர்வு முடிந்து வெளியில் தோழிகளுடன் செல்ல, வண்ண உடைகளை கூட வைத்திருந்தனர். ஒவ்வொருவரது பையையும் சோதித்து அவற்றை எடுத்து வைத்து விட்டோம்; மாணவியரின் பெற்றோரை வரவழைத்து ஒப்படைத்து விடுவோம். தேவையற்ற சேட்டைகளுக்கு, இடம் கொடுக்காமல், மாணவிகள் எவ்வித தொந்தரவிலும் சிக்காமல் இருப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் முன்கூட்டியே செய்து விட்டோம்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.
இருப்பினும், மாணவியர் தங்கள் தோழியரை கட்டியணைத்து, கண்கள் கலங்கி பிரியாவிடை அளித்து, கைகளை அசைத்தபடியே நடைபோட்டனர். இதேபோல், நஞ்சப்பா பள்ளி உள்ளிட்ட அதிகளவு மாணவர்கள் படிக்கும் பள்ளிகளிலும், கொண்டாட்டங்களுக்கு ஆசிரியர்கள் அனுமதி தரவில்லை. அதே நேரம், ரோந்துப்பணியில் ஈடுபட்ட போலீசாரும், மாணவர்களை கலைந்து போக செய்தனர். இருப்பினும், தோழமையாய் பழகிய மாணவ, மாணவியர் ஒன்றாக பேசி மகிழ்ந்து கலைந்து சென்றனர்.