Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ இனிப்பும், கசப்பும் கலந்த கலவை! பொருளியல், இயற்பியல் தேர்வு குறித்து மாணவர்கள் கருத்து

இனிப்பும், கசப்பும் கலந்த கலவை! பொருளியல், இயற்பியல் தேர்வு குறித்து மாணவர்கள் கருத்து

இனிப்பும், கசப்பும் கலந்த கலவை! பொருளியல், இயற்பியல் தேர்வு குறித்து மாணவர்கள் கருத்து

இனிப்பும், கசப்பும் கலந்த கலவை! பொருளியல், இயற்பியல் தேர்வு குறித்து மாணவர்கள் கருத்து

ADDED : மார் 26, 2025 12:28 AM


Google News
Latest Tamil News
திருப்பூர்; பிளஸ் 2 பொருளியல் மற்றும் இயற்பியல் பாடம் சிலருக்கு கடினமானதாகவும், பலருக்கு எளிமையானதாகவும் இருந்தது.

பிளஸ் 2 தேர்வில் கடைசி தேர்வு நேற்று நடந்தன. மாவட்டத்தில் இயற்பியல் பாடத் தேர்வெழுத, 13,904 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், 13,827 பேர் தேர்வெழுதினர். 77 பேர் 'ஆப்சென்ட்' ஆகினர். பொருளியல் தேர்வில், 11,329 பேர் தேர்வெழுத விண்ணப்பித்திருந்த நிலையில், 11,157 பேர் தேர்வெழுதினர்; 172 பேர் 'ஆப்சென்ட்' ஆகினர்.

கார்த்திகா:


பொருளியல் தேர்வு, எளிதாக தான் இருந்தது. ஒரு மதிப்பெண் வினாக்களில், ஓரிரு வினாக்கள் மட்டுமே, புத்தகத்தின் உட்பகுதியில் இருந்து கேட்கப்பட்டிருந்தது. பெரும்பாலான வினாக்கள், புத்தக வினாக்களில் இருந்து தான் கேட்கப்பட்டிருந்தன. ஆசிரியர்கள் குறித்து கொடுத்த பெரும்பாலான வினாக்கள் கேட்கப்பட்டிருந்தன.

காயத்ரி:


என்னை பொருத்தவரை பொருளியல் தேர்வு மிக எளிதாக இருந்தது. ஓரிரு வினாக்கள் மட்டுமே, சற்று குழப்பும் வகையில் இருந்தது. துவக்கம் முதலே, பாடங்களை நன்கு படிப்பேன் என்பதால், எனக்கு அது கடினமானதாக தெரியவில்லை. 100 மதிப்பெண் கிடைக்கும் என நம்புகிறேன்.

இந்திரா:


இயற்பியல் பாடம், கடினமாக இருந்தது. 5 மதிப்பெண் வினா, சற்று குழப்பும் விதமாக இருந்தது. 2 மதிப்பெண் வினாக்கள் கூட எளிதாக இல்லை சில கேள்விகள், எங்கிருந்து கேட்கப்பட்டவை என்று கூட கணிக்க முடியவில்லை. இருப்பினும், தேர்ச்சி செய்து விடும் அளவுக்கே கேள்வித்தாள் இருந்தது.

அபில் அகமது :


இயற்பியல் பாடத்தில், 5 மதிப்பெண் வினாக்களை தவிர, அனைத்தும் எளிதாக தான் இருந்தது; பெரும்பாலும், புத்தகத்தின் உட்புறம், வெளிப்புறம் என கலந்தே வினாக்கள் கேட்கப்பட்டிருந்தன. தேர்ச்சி பெறுவதில் எந்த சிரமமும் இருக்காது.

ஆசிரியர்கள் சொல்வதென்ன?


பொருளியல் ஆசிரியர்கள் கூறுகையில், 'பொருளியல் பாடம் எளிதாக தான் இருந்தது. 5 மதிப்பெண் பொறுத்தவரை 'சாய்ஸ்' கேள்விகள், இரண்டும் சற்று கடினமானதாக இருந்தாலும், மாணவர்கள் தேர்ந்தெடுத்து எழுதும் அளவில் தான் இருந்தது,' என்றனர்.

இயற்பியல் ஆசிரியர் ஒருவர் கூறுகையில், 'இம்முறை கணக்கு சார்ந்த கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. 2 மதிப்பெண் வினாக்கள் கூட, சற்று கடினம் தான். இருப்பினும், தேர்ச்சி பெறுவது எளிது,' என்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us