/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ கால்நடை பராமரிப்புக்கு முகாம்; ஒன்றியங்களில் நடத்த திட்டம் கால்நடை பராமரிப்புக்கு முகாம்; ஒன்றியங்களில் நடத்த திட்டம்
கால்நடை பராமரிப்புக்கு முகாம்; ஒன்றியங்களில் நடத்த திட்டம்
கால்நடை பராமரிப்புக்கு முகாம்; ஒன்றியங்களில் நடத்த திட்டம்
கால்நடை பராமரிப்புக்கு முகாம்; ஒன்றியங்களில் நடத்த திட்டம்
ADDED : ஜூன் 23, 2025 11:03 PM

உடுமலை; மடத்துக்குளம் அருகே, இச்சிபட்டி கிராமத்தில், கால்நடைத்துறை சார்பில், கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாம் நடந்தது.
முன்னாள் எம்.எல்.ஏ., ஜெயராமகிருஷ்ணன், முகாமை துவக்கி வைத்து, சிறந்த கிடேரி கன்றுகள் வளர்ப்போருக்கு சான்றிதழ் வழங்கினார்.
முகாமில், கால்நடைத்துறை உடுமலை கோட்ட உதவி இயக்குநர் ஜெயராமன், பேசுகையில், 'அனைத்து ஒன்றியங்களிலும் மாதம் ஒரு முறை சிறப்பு கால்நடை பராமரிப்பு முகாம் நடத்தப்படும். மருந்தகம் மற்றும் கிளை நிலையம் இல்லாத கிராமங்களுக்கு இத்திட்டத்தில் முக்கியத்துவம் வழங்கப்படும். நடப்பாண்டில் மொத்தமாக 36 முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது,' என்றார்.
முகாமில், 700க்கும் மேற்பட்ட கால்நடைகள், செல்லப்பிராணிகள் மற்றும் கோழிகளுக்கு சிகிச்சை வழங்கப்பட்டது. கால்நடை உதவி மருத்துவர்கள், கால்நடை ஆய்வாளர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.