/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ குழாய் உடைப்பு... மூடப்படாத குழிகள் சாலை அலங்கோலம்; பொதுமக்கள் அவதி குழாய் உடைப்பு... மூடப்படாத குழிகள் சாலை அலங்கோலம்; பொதுமக்கள் அவதி
குழாய் உடைப்பு... மூடப்படாத குழிகள் சாலை அலங்கோலம்; பொதுமக்கள் அவதி
குழாய் உடைப்பு... மூடப்படாத குழிகள் சாலை அலங்கோலம்; பொதுமக்கள் அவதி
குழாய் உடைப்பு... மூடப்படாத குழிகள் சாலை அலங்கோலம்; பொதுமக்கள் அவதி
ADDED : ஜூன் 06, 2025 06:27 AM

திருப்பூர்; திருப்பூர் மாநகராட்சி 55வது வார்டுக்கு உட்பட்ட வெள்ளியங்காடு 60 அடி ரோடு, பல்லடம் ரோடு மற்றும் தாராபுரம் ரோட்டை இணைக்கும் பிரதான ரோடாக உள்ளது. குடியிருப்புகள், வர்த்தக நிறுவனங்கள், பனியன் நிறுவனங்கள் ஏராளமானவை அமைந்துள்ளன.
ஏராளமான வாகனங்கள் இந்த வழியாகச் சென்று வருகின்றன. தாராபுரம் ரோட்டில் அமைந்துள்ள அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்குச் செல்லும் வாகனங்கள் இந்த ரோட்டைப் பயன்படுத்துகின்றன.
இந்த ரோட்டில் பாதாள சாக்கடை குழாய்; 4வது குடிநீர் திட்டக் குழாய்; குடிநீர் வினியோக குழாய் ஆகியன அமைக்கப்பட்டுள்ளன. இப்பணிகளுக்காக தோண்டிய குழிகள் முறையாக மூடப்படாமல் நீண்ட காலமாக பெரும் அவதி நிலவியது.
பல மாதங்களுக்குப் பின் இவை சரி செய்யப்பட்டு ரோடு அமைக்கப்பட்டது. இருப்பினும் அடிக்கடி ஏற்படும் குழாய் உடைப்பு காரணமாக இந்த ரோடு பல இடங்களில் தோண்டிப் போட்டு அலங்கோலமாக மாறி விட்டது. அங்குள்ள நாச்சியார் பாடசாலை முன்புறம் குடிநீர் வினியோக குழாய் சேதம் ஏற்பட்டு குடிநீர் வெளியேறி பெரும் அவதி ஏற்பட்டது.அங்கு இயந்திரம் மூலம் குழி தோண்டி, குழாய் உடைப்பு சரி செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டது. இதற்காக ரோட்டின் ஒரு பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு, வாகனங்கள் திருப்பி விடப்பட்டன.
இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்கும் அவதிக்கும் உள்ளாகினர்.