ADDED : ஜூன் 06, 2025 06:27 AM

விவேகானந்தா அகாடமி
உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, காங்கயம் விவேகானந்தா அகாடமி மேல்நிலைப்பள்ளியில், 'பசுமைச்சூழலை பராமரிப்போம் - எதிர்காலத்திற்கு பாதுகாப்பளிப்போம்' என்ற கருப்பொருளுடன், வகுப்பு வாரியாக பள்ளி மாணவர்களும், ஆசிரியர்களும் மரக்கன்றுகளை பள்ளி வளாகம் முழுதும் நட்டனர். பள்ளி முதல்வர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 'மரம் வளர்ப்போம்; மனிதம் காப்போம் என்ற சிந்தனையை சமூகத்திடம் கொண்டு சேர்ப்பதில் எங்கள் பள்ளி முதன்மை வகிக்கிறது' என்று பள்ளி நிர்வாகத்தினர் கூறினர்.