/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/செல்லப்பிராணிகளுக்கு புரதச்சத்துக்கள் தேவை: கால்நடை மருத்துவ கருத்தரங்கில் விழிப்புணர்வுசெல்லப்பிராணிகளுக்கு புரதச்சத்துக்கள் தேவை: கால்நடை மருத்துவ கருத்தரங்கில் விழிப்புணர்வு
செல்லப்பிராணிகளுக்கு புரதச்சத்துக்கள் தேவை: கால்நடை மருத்துவ கருத்தரங்கில் விழிப்புணர்வு
செல்லப்பிராணிகளுக்கு புரதச்சத்துக்கள் தேவை: கால்நடை மருத்துவ கருத்தரங்கில் விழிப்புணர்வு
செல்லப்பிராணிகளுக்கு புரதச்சத்துக்கள் தேவை: கால்நடை மருத்துவ கருத்தரங்கில் விழிப்புணர்வு
ADDED : பிப் 23, 2024 11:39 PM

உடுமலை;'செல்லப்பிராணிகளுக்கு அவற்றின் வளர்ச்சி மற்றும் எடைக்கேற்ப, உணவளிப்பது அவசியமாகும்,' என கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது.
உடுமலை கால்நடை மருத்துவ கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் கால்நடை உணவியல் துறை சார்பில், செல்லப்பிராணிகள் உரிமையாளர் சந்திப்பு மற்றும் செல்லப்பிராணிகளுக்கு அறிவியல் ரீதியில் உணவளிக்கும் முறைகள் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது. துறைத்தலைவர் கதிர்வேலன் வரவேற்றார்.
கல்லுாரி முதல்வர் குமாரவேல் தலைமை வகித்து பேசியதாவது: பிராணிகளுக்கும், 'உணவே மருந்து' என்ற அடிப்படையில், உணவளிப்பது அவசியாகும். செல்லப்பிராணிகளுக்கு தேவையான புரதச்சத்து மற்றும் இதர சத்துகள் குறித்து தெரிந்து கொண்டு, அதற்கேற்ப உணவளித்தால், பிராணிகளுக்கு பெரும்பாலான நோய்த்தாக்குதல்கள் தவிர்க்கப்படும்.
வளர்ச்சியும் சீராக இருக்கும். கால்நடை மருத்துவ கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் பெதப்பம்பட்டி சிகிச்சை மையத்தில், கால்நடைகளுக்கு சிகிச்சையளிக்கும் அனைத்து நவீன வசதிகளும் உள்ளன.
இவ்வசதிகளை, சுற்றுப்பகுதி கால்நடை வளர்ப்போர், தங்கள் கால்நடைகளுக்கு சிகிச்சையளிக்க பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு, பேசினார்.
சிறப்பு விருந்தினராக பங்கேற்ற டாக்டர் வெங்கடேஷ்வரன் பேசியதாவது: செல்லப்பிராணிகள் மனிதர்களுக்கு பல வகையில் உதவுகின்றன. நாய்கள் பிறந்ததும், அவற்றின் வளர்ச்சி தருணங்களை நன்கு தெரிந்து கொண்டு அதற்கேற்ப, உணவளிக்க வேண்டும்.
வளர்ந்த நாய்களுக்கு, 42 பற்கள் இருக்கும். நாய்களின் எடைக்கேற்ப, தேவையான புரதச்சத்துகளை வழங்க வேண்டும். புரதம் மிக்க உணவுகளை சரிவிகிதத்தில் கொடுத்தால், அவற்றின் வளர்ச்சி சிறப்பாக இருக்கும்.
சத்துகளை அறியாமல், உணவளித்தால், செல்ல பிராணிகளுக்கு நோய்த்தாக்குதல் ஏற்படும். வளர்ந்த நாய்களுக்கு 40-50 சதவீதம் மாவுச்சத்தும், 18-22 சதவீதம் புரதம்; 5-8 சதவீதம் கொழுப்பு; 3-5 உயிர் சத்து; தனிமங்கள், 1-2 சதவீதமும் உள்ளடக்கிய உணவு வழங்க வேண்டும். நார்ச்சத்து குறைந்தது 5 சதவீதம் இருக்க வேண்டும்.
இவ்வாறு, அவர் பேசினார்.
டாக்டர் கல்யாண் நன்றி தெரிவித்தார். கருத்தரங்கில், செல்லப்பிராணிகளின் உரிமையாளர்கள். இரண்டாம் ஆண்டு இளங்கலை மாணவர்கள் பங்கேற்றனர்.