/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ ரயில்வே புக்கிங் சென்டர் கோரி மத்திய அமைச்சரிடம் மனு ரயில்வே புக்கிங் சென்டர் கோரி மத்திய அமைச்சரிடம் மனு
ரயில்வே புக்கிங் சென்டர் கோரி மத்திய அமைச்சரிடம் மனு
ரயில்வே புக்கிங் சென்டர் கோரி மத்திய அமைச்சரிடம் மனு
ரயில்வே புக்கிங் சென்டர் கோரி மத்திய அமைச்சரிடம் மனு
ADDED : மே 26, 2025 06:35 AM

அவிநாசி : அவிநாசி நகராட்சியை சுற்றிலும் 31 குக்கிராமங்கள் உள்ளன. மூன்று லட்சம் மக்கள் வசிக்கின்றனர்.
இவர்களுடைய அன்றாட வேலை தொடர்பாகவும், சுற்றுலா, ஆன்மிகம், ஏற்றுமதி, வணிகம் மற்றும் வெவ்வேறு அலுவல்களுக்காகவும் ரயிலில் பயணம் செய்வதற்காக, ரயில் டிக்கெட் புக்கிங் செய்வதற்கு திருப்பூர் ரயில்வே ஸ்டேஷனுக்கு சென்று புக்கிங் செய்து வருகின்றனர்.
ஒவ்வொரு முறையும் நேரமும், வீண் அலைச்சலும் பொதுமக்களுக்கு ஏற்படுகிறது.
அவிநாசிக்கு நேற்று வந்த மத்திய இணை அமைச்சர் முருகனிடம், கோவை வடக்கு மாவட்ட பா.ஜ., தலைவர் கரு.மாரிமுத்து முன்னிலையில், அவிநாசி நகர பா.ஜ., தலைவர் ரமேஷ், ''அவிநாசி போஸ்ட் ஆபீஸில் ரயில்வே துறையின் முன்பதிவு மையம் அமைத்து தர வேண்டும்' என்று கோரி மனு அளித்தார்.
சம்பந்தப்பட்ட துறை அமைச்சரிடம் பேசி, ரயில்வே புக்கிங் சென்டர் அமைக்க நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் உறுதி அளித்தார்.
நீலகிரி லோக்சபா பொறுப்பாளர் கதிர்வேலன், துணைத் தலைவர் சண்முகம், ஹிந்து முன்னணி மாவட்ட செயலாளர் கேசவன், மாவட்ட பொருளாளர் டாக்டர் சுந்தரன், மேற்கு ஒன்றிய தலைவர் பிரபு ரத்தினம், நகர பொதுச்செயலாளர் நந்தகுமார் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.