/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ மோடியின் 'மனதின் குரல்'; பூத் வாரியாக ஒளிபரப்பு மோடியின் 'மனதின் குரல்'; பூத் வாரியாக ஒளிபரப்பு
மோடியின் 'மனதின் குரல்'; பூத் வாரியாக ஒளிபரப்பு
மோடியின் 'மனதின் குரல்'; பூத் வாரியாக ஒளிபரப்பு
மோடியின் 'மனதின் குரல்'; பூத் வாரியாக ஒளிபரப்பு
ADDED : மே 26, 2025 06:36 AM
திருப்பூர் : பிரதமர் மோடி, நாட்டு மக்களிடையே உரையாற்றும் நிகழ்ச்சியாக 'மனதின் குரல்' நிகழ்ச்சி உள்ளது. நேற்று நடந்த இந்நிகழ்ச்சியை பொதுமக்கள் காணும் வகையில், பா.ஜ.,வினர் ஏற்பாடு செய்திருந்தனர்.
திருப்பூர் வடக்கு மாவட்ட பா.ஜ.,வுக்கு உட்பட்ட மூன்று சட்டசபை தொகுதிகளில் உள்ள 1049 பூத் பகுதிகளிலும், உரிய பூத் கமிட்டி சார்பில், இந்த நிகழ்ச்சி பொதுமக்கள் காணும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.அதே சமயம், இந்த பூத் கமிட்டிகளின் சார்பில், பாக்., மீதான போர் வெற்றியைக் குறிப்பிட்டு கொண்டாடும் வகையில் தேசிய கொடி ஊர்வலமும் நடந்தது.
வடக்கு மாவட்ட பா.ஜ., தலைவர் சீனிவாசன் ஏற்பாட்டின் பேரில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டு, பூத் வாரியாக, பூத் கமிட்டி மற்றும் மண்டல் கமிட்டி நிர்வாகிகள், கட்சியினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.